
திருவிழாக்காலங்கலில், கல்யாண மண்டபங்களில் மட்டுமே சீரியல் லைட்
பயன்படுகிறது என்ற எண்ணத்தை உடைத்தெறிந்து விட்டு, நீங்கள் தினமும் தேனீர்
அருந்தும் பேக்கரியில் இருந்து உங்கள் வியாபாரத்தை தொடங்குங்கள்.
ஆம்,
சீரியல் லைட் பிஸினஸ் துவங்குங்கள்.
சீரியல் லைட் பிஸினஸ் துவங்குங்கள்.
சிறிய முதலீடு போதும், உங்கள் வாழ்வை கலர்புல் ஆக்க.
6 மீட்டர் கொண்ட குண்டு பல் கலர் லைட் 180 ரூ முதல் 360 வரையில் தரத்தை
பொறுத்து மொத்த விலைக்கு கிடைக்கிறது. அதுவே LED எல்.ஈ.டி பல்புகள்
என்றால் ஒரு மீட்டர் 60 ரூபாயிலிருந்து கிடைக்கிறது.
குறைந்தபட்டம் ஐந்தாயிரம் ரூபாய் முதலீடு செய்தால் போதும். ஒரளவுக்கு தொழிலை துவங்க போதுமானதாக இருக்கும்.
மார்க்கெட் செய்ய இரண்டு யோசனைகள் இருக்கு :
1. வாடகை அடிப்படையில் சீசன் நேரங்களில் கடைகளுக்கு கொடுக்கலாம்.
எப்படியும் மெயின்ரோட்டில் அமைந்துள்ள கடைகள் "பளிச்"ன்னு இருந்தாக
வேண்டிய இந்த காம்பிடேட்டிவ் உலகத்தில் நேரடியாக கடை முதலாளிகளை சந்தித்து
உங்களிடம் உள்ள ரகத்தை காட்டி விற்பனை செய்யுங்கள். ஒரு சரத்திற்கு 20 ரூ
லாபம் வைத்தாலும் எப்படியும் ஒரு கடைக்காரர் 4 சரமாவது வாங்குவார். தினமும்
100 : 5 ன்னு வைச்சாலும் குறைந்தபட்சம் 500 ரூபாயவது நிச்சயம் சம்பாதிக்க
சீரியல் லைட் விற்பனை தொழில் உங்களுக்கு உதவும் என நினைக்கிறேன்.
அதுபோக, பிளாட்பார கையேந்தி பவன்களுக்கு தினவாடகை அடிப்படையிலும் கொடுக்கலாம். சரத்திற்கு 5 ரூ வாடகை வைத்தாலும் போதும். பத்து கடைகளுக்கு போட்டாலும் 50 ரூபாய் எக்ஸ்ட்ரா வருமானம் தினமும் வரும். இதெல்லாம் உடனடியாக காசு கைக்கு வரும் வழிகள்.
நீங்கள் செய்யவேண்டியது, கொஞ்சம் எலக்ட்ரிக்கல் பற்றிய அறிவும், உங்களுக்கு
அருகாமையில் உள்ள மொத்த விற்பனையாளரை கண்டுபிடிப்பது மட்டுமே. தென்
மாவட்டங்களை சார்ந்தவர்களாக இருந்தால் கோவை, ஈரோடு பகுதிகளில் மொத்த
விற்பனையாளர்களை பெறலாம்.
கொஞ்சம் கலை உணர்வுடன் செய்வீர்களேயானால், வீட்டு விசேசங்கள், பங்சன் ஹால்கள் போன்றவற்றில் நல்ல பெயர் எடுக்கலாம்.
No comments:
Post a Comment