ஆசியாவிலேயே மிகப் பெரிய பொதுநல மருத்துவமனையான சென்ட்ரல் மருத்துவமனையின்
வெளியிலுள்ள பிளாட்பாரத்தில் ஐந்து ரூபாய்க்கு ரஸ்னா விற்பவனிடமும் சரி,
ராயபேட்டை மல்டிப்ளெக்ஸில் ஏசி ரூமில் உயர்ரக குளிர்பானம் விற்பவனிடமும்
சரி கூட்டம் அலைமோதிக் கொண்டுதான் இருக்கும். சென்னையில் எங்காவது ஒரு
பொட்டிக் கடை வைத்து விட்டால் போதும் நீங்கள் பிழைத்துக் கொள்ளலாம். காரணம்
ஜன நெருக்கடி நிறைந்து இருக்கும் சென்னை மிகப்பெரிய தொழில் வணிக வியாபார நகரம், அதனாலேயே சென்னை எல்லார்க்கும் எல்லாமுமாய் விளங்குகிறது.

சென்னையின் மிகப் பிரபலாமான வர்த்தக மையம் திநகரில் இருக்கும் ரங்கநாதன் தெரு, உஸ்மான் ரோடு மற்றும் பாண்டிபஜார்.
இந்த மூன்று இடங்களிலுமே பெண்களுக்கான ஆடைகள், ஆபரணங்கள், அணிகலன்கள்
விற்கும் கடைகளும் சுடிதார் தைக்கும் தையலகங்களுமே அதிகம். அதனால்
பெண்களின் கூட்டத்திற்கு இங்கு பஞ்சமே இருக்காது. இந்தியாவுக்கே பஞ்சம்
வந்தாலும் ரங்கநாதன் தெருவில் இருக்கும் கூட்டத்திற்கு மட்டும் பஞ்சமே
வராது. ரங்கநாதன் தெரு மாம்பலம் ரயில் நிலைய வாசலிலேயே இருப்பதும் பேருந்து நிலையமும் நடந்து செல்லும் தூரத்திலேயே இருப்பதும் மக்களுக்கு மிகவும் வசதியாய்ப் போய்விட்டது. இந்தத் தெருவின் பெரும்பாலான பகுதியை ஆக்கிரமித்துக் கொண்டிருப்பது
சரவணா ஸ்டோர்ஸின் பெரிய பெரிய கட்டிடங்கள் தான். இந்தத் தெருவில் துணிக்
கடைகளும் தையலகங்களும் அதிகம். மிகப் பெரிய பாத்திரக் கடையும் உள்ளது.
ரங்கநாதன் தெரு தொட்டுக் கொண்டிருக்கும் உஸ்மான் ரோடில் தங்க நகைக்கடைகள் அதிகம். சரவணா, ஜி.ஆர்.டி, ஓ.கே.ஜெ, ஜாய் அலுக்காஸ், தனிஷ்க், பாத்திமா, கசானா என்று
பெரிய பெரிய நகைக் கடைகளின் பெயர்களை அடுக்கிக் கொண்டே செல்லலாம்.
அவர்களும் தங்கள் கடைகளை அடுக்கு மாடிகளாக அடுக்கிக் கொண்டே தான்
செல்கிறார்கள். சரவணா, போத்திஸ், சென்னை சில்க்ஸ், ஆர்.எம்.கே.வி, நல்லி, குமரன் சில்க்ஸ் போன்ற ஜவுளிக் கடல்களும் இங்கே தான் ஒருவருக்கொருவர் போட்டியாய் அணிவகுத்து நிற்கிறார்கள். ஒரே ஒரு உபரி தகவல் இந்த 'எடுத்துக்கோ எடுத்துக்கோ'
கடையில் மட்டும் இலவசமாக கொடுத்தால் கூட எதையும் எடுத்து விடாதீர்கள்
காரணம் இங்கே பொருட்களின் விலையும் குறைவு தரமும் குறைவு. இவ்வளவு பெரிய
பெரிய கடைகளுக்கு நடுவில் இருக்கும் சாலை வெகுவாக சுருங்கி விட்டதால் வாகன
நெரிசலும் ஜன நெருக்கடியும் எப்போதுமே ஜெகஜோதியாய் இருக்கும்.
இந்த இரண்டு தெருக்களையும்
சுற்றிவிட்டு பாண்டி பஜார் சென்றால் அங்கே பெண்களுக்கான அணிகலன்கள்
மொத்தமும் விதவிதமாக அணிவகுத்து நிற்கும். அழகழகான வாட்சுகள், கம்மல்கள்,
வளையல்கள், கள்,கள் என்று அடுக்கிக் கொண்டே செல்லலாம்.
சாதாரண
மற்றும் விடுமுறை நாட்களில் இருக்கும் கூட்டத்தைக் காட்டிலும் விழாக்
காலங்களில் கூட்டம் பலமடங்கு அதிகமாக இருக்கும். காரணம் சென்னை
மட்டுமில்லாமல் வெளிமாவட்டங்களில் இருந்தும் மக்கள் அதிகளவில் வருகை
புரிவார்கள். இவ்வளவு கூட்டத்தையும் சமாளிக்கும் அளவிற்கு திநகரில்
உணவகங்கள் கிடையாது. இங்கு உணவகங்கள் அதிகம் தான் என்றாலும் பண்டிகை
தினங்களில் இருக்கும் கூட்டத்துடன் ஒப்பிடும் பொழுது சொற்பமாகவே தெரியும்.
அதனால் பண்டிகை நாட்களில் இங்கு வருமுன் உணவை முடித்துவிட்டு வருவது நல்லது
இல்லையேல் மறந்துவிட்டு வருவது நல்லது.
ரங்கநாதன் தெருவிற்கு அடுத்தபடியாக
மிக மிக நெரிசலான குறுகலான கூட்டம் அதிகம் இருக்கும் இடம் ரிச் ஸ்ட்ரீட்
தான். ஒரே ஒரு வித்தியாசம் இங்கு ஆண்களை மட்டுமே அதிகம் காண முடியும்.
பெண்கள் இங்கு தனியாக
செல்வது அவ்வளவு நல்லதும் இல்லை. இங்கு போலிகள் அதிகம் என்பதால் ஏமாறாமல்
பொருட்களை வாங்குவது உங்கள் சாமர்த்தியம். இந்த இடத்தைப் பற்றியோ அல்லது
வாங்கப் போகும் பொருளைப் பற்றியோ முழுவதுமாக அறிந்த்தவரை உடன் அழைத்துச்
சென்றால் அடுத்த முறை ரிச் ஸ்ட்ரீட் வருவதற்கு நீங்கள் தயங்கமாட்டீர்கள்.
(நட்டு போல்ட் கார்டு ரீடர், ரிமோட் வாங்க செல்பவர்களுக்கு இது
பொருந்தாது). பல எலெக்ட்ரானிக் பொருட்களின் சர்வீஸ் சென்டரும் இங்கு
உண்டு.
எந்த படிப்பிற்கு, எந்த துறைக்கு, எந்த ஆத்தர் எழுதிய புத்தகம்
வாங்க வேண்டுமானாலும் நாம் செல்ல வேண்டிய ஒரே இடம் சென்ட்ரல் புறநகர் ரயில்
நிலையத்திற்கு அடுத்த கட்டிடமாக இருக்கும் மூர் மார்கெட். ஐஐடி புத்தகங்களிலிருந்து ஐடிஐ புத்தகம் வரை அனைத்தும் ஒரே இடத்தில் கிடைப்பதால் இளைஞர்களின்
கூட்டம் அலைமோதும். இங்கு கிடைக்காத புத்தகங்களே இல்லை. பழைய புதிய பாடப்
புத்தகங்களுக்கு என்றே தனிதனிக் கடைகள் இங்கு உண்டு. பழைய வார
மாத இதழ்களும் கிடைக்கும்.
குறிப்பிட்ட
பாடப் புத்தகத்திற்கு எந்தெந்த ஆத்தர்கள் புத்தகங்கள் எழுதயுள்ளர்கள்,
அவற்றில் எந்த ஆத்தர் எழுதிய புத்தகம் சிறப்பாக இருக்கும் என்பன போன்ற பல
விசயங்களை தங்கள் நா நுனியில் வைத்திருப்பார்கள். புத்தகம் பற்றிய தகவல்கள்
அனைத்தும் ஆறு வயது சிறுவனிலிருந்து அறுபது கிழவர் வரை அறிந்து வைத்திருப்பது ஆச்சரியம் என்றால், இவர்களுக்கு குறைந்தபட்ச படிப்பறிவு கூட கிடையாது என்பது அதிசியமான விஷயம். உங்களுக்கு
சென்னை பாஷை பேசத் தெரிந்திருந்ததால் புத்தகத்தை பேரம் பேசி மிகக்
குறைந்த விலைக்குக் கூட வாங்கலாம். இங்கே வண்ண வண்ண மீன்களும், மீன்
தொட்டிகளும், மீன் வளர்ப்பு சார்ந்த பொருட்களும் விற்பனையில் உள்ளன என்பது
குறிப்பிடத்தக்க விஷயம்.
மெரினா கடற்கரையில் கண்ணகி சிலை அருகே
இருக்கும் பாரதியார் சாலை முழுவதிலும் புத்தகக் கடைகள் தான், ஆனால் இங்கே
பாடப் புத்தகளை விட பழைய புதிய கதைப் புத்தகங்கள் அதிகம். கொஞ்சம்
நேரமெடுத்து தேடினால் பல அரிய பழைய புத்தகங்கள் சிக்கும். பொழுது போகவில்லை
என்றால் மெரினா செல்வதை விட இங்கு வருவது மிகவும் பிடிக்கும்.பாண்டி
பஜாரிலும் புத்தகக் கடைகள் உண்டு. அங்கு பெரும்பாலும் உலகப் புகழ்பெற்ற
ஆங்கிலப் புத்தகங்களே கிடைக்கும்.

நீங்கள் கள்ளத்தனமாக வாங்கும் அப்பொருட்களின் ஆயுட்காலம் உங்கள்
அதிர்ஷ்டத்தைப் பொறுத்தே உள்ளது. இந்தியாவில் முறைப்படி ஐ-பாட் விற்பனைக்கு
வருமுன்பே இங்கு வந்துவிட்டது என்பது ஆப்பிள் அறிந்த விஷயம். பர்மா பஜார்
பற்றி லக்கிலுக் யுவகிருஷ்ணா எழுதி இருக்கும் அழிக்கப் பிறந்த்தவன் நாவலில் இருந்து அதிக விசயங்களைத் தெரிந்து கொள்ளலாம்.
புதுப்பேட்டை. இந்த இடத்திற்கு இந்தப் பெயர் சாலப்பொருந்தும்.
காரணம் பழைய ஸ்கூட்டரை கொண்டு சென்றால் அதை புதிய நான்கு சக்கர வாகனமாகவே
மாற்றித் தரும் அளவிற்கு திறமை வாய்ந்த மெக்கானிக்குகள் இங்கு உண்டு.
இங்கிருக்கும் எல்லா மெக்கானிக்குகளும் எல்லா காரையும் பார்ப்பது இல்லை.
போர்ட் என்றால் நம்பி, அம்பாசிடர் என்றால் கரீம் பாய், என்று ஒவ்வொரு
கம்பெனிக்கும் ஒரு திறமையான மெக்கானிக் உள்ளார். இருசக்கர வாகனத்தை
பிரித்து மேய்வதில் இவர்களை விட்டால் வேறு ஆள் இல்லை எனலாம். சமீபத்தில்
புதுபேட்டைக்குச் சென்றிருந்த பொழுது ஒரு விளம்பரம் என்னை ஆச்சரியப் பட
வைத்தது என்பதை விட அதிர்சிக்குள்ளாக்கியது. இதுதான் அந்த விளம்பரம்,
"இங்கு BENZ BMW AUDI கார்களுக்கு சர்விஸ் செய்யப்படும், உதிரி பாகங்கள்
கிடைக்கும்".
காய்கறி வாங்க கோயம்பேடு மார்க்கெட், fresh fish வாங்க எண்ணூர், மதுரவாயல் மார்கெட். மளிகை சாமான்கள் வாங்க பாரிஸ், மூக்குக் கண்ணாடி, கல்யாண பத்திரிக்கை, எழுதும் நோட்டு, பட்டாசு, வாங்க BROADWAY.
என்று ஒவ்வொரு தொழிலுக்கும் ஒவ்வொரு ஏரியாவை பிரித்து அழகு பார்க்கிறது
சென்னை.
நன்றி !
seenuguru.com
No comments:
Post a Comment