share

Sunday, April 19, 2015

தொழில் முனைவோர் {Entrepreneur }

எதை விரும்புகிறோமோ அதைத்தான் நாம் அடைகிறோம். அசாதாரணமான கனவுகள் அசாதாரணமான வெற்றியைக் கொண்டு வந்து குவிக்கிறது. இதுதான், இவ்வளவுதான் என்று சுருங்காமல், சற்றே விசாலமாகக் கனவு கண்டால் எப்படி இருக்கும்? மாதச் சம்பளம். வருடாந்திர சம்பள உயர்வு. சொந்த வீடு. ஒரு கார். இவை சராசரிக் கனவுகள். அட்டகாசமாக ஒரு பிசினஸ் பிளான். செயல்படுத்த சொந்தமாக ஒரு நிறுவனம். சொல்வதைச் செய்து முடிக்க ஒரு டீம். புதிய ஐடியாக்களை முனைப்புடன் முயன்று பார்க்கவேண்டும். புதிய வாசல்களைத் திறக்கவேண்டும். மேலே, இன்னும் மேலே என்று வளரவேண்டும். நான். என் நிறுவனம். என் குடும்பம். என் டீம். என் சமூகம்.

ரிஸ்க்கான கனவுதான். சந்தேகம் இல்லை. ஆனால் சாதித்து முடித்துவிட்டால், உங்களை அடித்துக்கொள்ள ஆள் இல்லை. ஆட்டத்துக்கு நீங்கள் தயாரா? முதலீடு, பின்னணி எது பற்றியும் கவலைப்படவேண்டாம். குவியும் போட்டியாளர்கள் குறித்து அச்சம் கொள்ளவேண்டாம். எந்தத் துறை, எங்கிருந்து ஆரம்பிக்கவேண்டும் என்று குழம்பித்தவிக்கவேண்டாம். அடிப்படையில் இருந்து தொடங்கி படிப்படியாக, ஒரு பிசினஸ் பிளானை உங்களுக்காக வடிவமைத்துக்கொடுக்கிறது.  வெற்றிகரமான ஒரு தொழிலதிபராக உங்களை உருமாற்றுவதற்குத் தேவைப்படும் அத்தனை வழிமுறைகளையும் உள்ளடக்கிய ப்ளூப்ரிண்ட் இது
 

தொழில் முனைவோருக்கு வழிகாட்டல்கள்

எங்கள் வாடிக்கையாளர் ஒருவர் இருபது ஆண்டுகளுக்கு முன்பு தொழிற்சாலை ஆரம்பிக்கும் போது அவரது நண்பர் கொடுத்த அறிவுரைகளாக எனக்குச் சொன்னது:
  1. 10 ரூபாய்க்கு வாங்கி 10.50 க்கு விற்று 50 காசுகள் ஆதாயம் பார்ப்பது ஒரு வகை வர்த்தகம். வாடிக்கையாளர் தரத்தயாராக இருக்கும் 10 ரூபாய்க்குள் பொருளைச் செய்து மிச்சப்படுத்துவதை ஆதாயமாக வைத்துக் கொள்வது போட்டி நிலவும் உற்பத்தித்துறை.

    போட்டியாளர்கள் கொடுக்கும் விலையை விட உனக்கு அதிகமாகக் கிடைக்கப் போவதில்லை.
  2. ஏற்கனவே இருக்கும் உறவுகள், அனுபவம் போட்டியாளர்களுக்கு வலிமை.
    புதிய இயந்திரங்கள், வேகமாகச் செயல்பட முடிதல் புதிய முனைவருக்கு வலிமை. இரண்டையும் புரிந்து கொண்டு போட்டி போட வேண்டும்.
  3. புதிதாக சந்தையில் நுழைபவர்கள் போட்டியாளர்களை விடக் குறைந்த விலை, அல்லது உயர்ந்த தரம் கொடுத்தால்தான் வாடிக்கையாளர்கள் திரும்பிப் பார்ப்பார்கள். ஏதாவது புதிய சத்தம் எழுப்பி கவனத்தை ஈர்த்தால்தான் பிழைக்க முடியும். அந்த கவன ஈர்ப்புக்கு ஆகும் செலவுகளால் ஆதாயம் குறையும்.
  4. மலிவு என்பது பயனுள்ள பொருளுக்குத்தான். விலை குறைவாக வாங்கிய பொருளைப் பயன்படுத்த முடியாவிட்டால் அது மலிவு இல்லை, அது வீண்.

    ஒரு ரூபாய்க்கு வாழைப் பழம் வாங்கிச் சாப்பிட்டால், அது 2 ரூபாய் பழத்தை விட மலிவு. ஆனால் வாங்கிய பழம் அழுகியிருந்தால் அந்தக் காசு வீண்தான்.
  5. விற்கும் பொருளிலும், அதன் விலையிலும் உனக்கு முழு நம்பிக்கை இருக்க வேண்டும். இந்த விலைக்கு இந்தப் பொருளை/சேவையை நான் வாங்குவேனா என்று எண்ணிப் பார்த்துக் கொள்ள வேண்டும். அப்போதுதான் வாடிக்கையாளரை சம்மதிக்க வைக்க முடியும்.
  6. தொழிலில் நிலைக்க வேண்டுமென்றால் நீடித்த வாடிக்கையாளர்கள் வேண்டும். விற்ற பொருள் அல்லது சேவையை அவர் பயன்படாமல் வைத்திருக்கிறார் என்றால் நீயே முனைந்து கூடுதல் உதவி செய்து பயன்படுத்த வைக்க வேண்டும். இல்லை என்றால் அடுத்த முறை உன்னிடம் வர மாட்டார்கள்.
  7. யாராவது கூக்குரலிட்டால், காது கொடுத்துக் கேட்க வேண்டும். உன் சேவை பொருள் நிறைவாக இருந்தால் யாரும் குறை சொல்லப் போவதில்லை. குறைகள் எந்த வடிவில் சொல்லப்பட்டாலும் கூர்ந்து கேட்டு அவற்றை நிவர்த்தி செய்ய வேண்டும்.
  8. நம்முடைய நலனைக் கருத்தில் வைக்கும் அதே நேரத்தில் அடுத்தவர்களின் நிலையிலிருந்து சிந்தித்துப் பார்க்கக் கற்றுக் கொள்ள வேண்டும்.
  9. ஒரு உறவில் இரண்டு பக்கமும் ஆதாயம் இருந்தால்தான் உறவு நீடிக்கும். ஒரு பக்கத்துக்கு ஆதாயமே இல்லாமல் பேரம் பேசினால் உறவு நிச்சயமாக முறிந்து விடும்.

No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...