share

Wednesday, April 8, 2015

எல்லா ஆன்டிராய்டு பயனாளிகளும் கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டியவை, ..!

எல்லா ஆன்டிராய்டு பயனாளிகளும் கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டியவை, இது கூகுள் சொன்னது..
  கூகுள் மேப்ஸ் 
தனி இடங்களை கூகுள் மேப்ஸ்களில் சேவ் செய்ய தேட வேண்டிய இடத்தை சர்ச் பாரில் டைப் செய்து மேல் இருந்து கீழ் புறமாக ஆன்டிராய்டு கருவியில் ஸ்வைப் செய்து நட்சத்திர குறியீடு கொண்டிருக்கும் ஐகானை க்ளிக் செய்தால் வேலை முடிந்தது.
 
கூகுள் நௌ 
கூகுள் அக்கவுன்டில் சைன் இன் செய்து கூகுள் செயலியை ஓபன் செய்யுங்கள், அடுத்து மெனு ஐகானில் கூகுள் நௌ சேவையை ஆன் செய்யுங்கள். உங்களது கருவியில் ஜிபிஎஸ் ஆன் செய்யப்பட்டிருந்தால் பொது போக்குவரத்து குறித்த தகவல்களை அறிந்து கொள்ள முடியும்.
 
ஜிமெயில் 
ஜிமெயில் மூலம் கூகுள் வேலட் சேவையை பயன்படுத்த அனுமதிக்கின்றது, இதை கொண்டு மற்றவர்களுக்கு பணம் அனுப்ப முடியும்.

க்ரூப் காலன்டர் 
கூகுள் காலன்டர் செயலியை ஓபன் செய்து மை காலன்டர்ஸ் மெனுவில் புதிய காலன்டரை உருவாக்கலாம், மேலும் அதனை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளவும் முடியும்.

கூகுள் கீப்
கூகுளின் சொந்த விட்ஜெட் தான் கூகுள் கீப், இதை பயன்படுத்தி நீங்கள் செய்ய வேண்டிய வேலைகளை பதிவு செய்து விட்டால் அதனினை சரியான நேரத்தில் நினைவூட்டும்.

கான்டாக்ட் 
ஆன்டிராய்டு போன் கான்டாக்ட்களை கூகுளுடன் சின்க் செய்து கொள்ளலாம்.

ப்ரோபைல் 
கூகுள் க்ரோமில் ஒவ்வொருத்தருக்கும் பல யூஸர் ப்ரோபைல்களை செட் செய்ய முடியும்.

கூகுள் டிரைவ் 
 முக்கயத்துவம் வாய்ந்த தகவல்களை கூகுள் டிரைவில் பாதுகாப்பாக வைத்து கொள்ள முடியும், 15 ஜிபி வரையிலான தகவல்களை இலவசமாக வைத்து கொள்ள முடியும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இன்பாக்ஸ் 
இன்பாக்ஸ் ஜிமெயில் இன்பாக்ஸை பல நிறங்களில் மாற்றியமைத்து கொள்ளலாம்.

No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...