
பொதுவாக வங்கிகள் தொழில் முனைவோரிடமிருந்து இருந்து நான்கு விஷயங்களை எதிர்பார்க்கும். இவற்றை 4C என்று கூறுவார்கள்.
மூலதனம்.( Capital )
தொழில் முனைவோரிடம் இருக்கும் மூலதனத்தை வைத்துதான் அவருக்கு எவ்வளவு கடன் கொடுக்கலாம் என்பதை வங்கி முடிவு செய்யும். குறைந்தது 10 முதல் 50 சதவிகிதம் வரை தொழில் முனைவோரிடம் மூலதனம் இருக்க வேண்டும்.
வாங்கிய கடனைத் திரும்பக் கொடுக்கும் திறன்.( Capacity )
தொழில்முனைவோரிடம் இருக்கும் பிஸினஸ் பிளான். என்ன தொழில் செய்யப் போகின்றார் , எப்படி செய்யப்போகின்றார் , போட்டியாளர்கள் இருக்கிறார்களா, என்ன மார்க்கெட் இருக்கிறது, என்ன லாபம் கிடைக்கும், அவருடைய முன் அனுபவம் என்ன என்பதையெல்லாம் உன்னிப்பாகக் கவனிப்பார்கள்.
குணநலன்.( Character )
தொழில் முனைவோர் யார், என்ன படித்திருக்கின்றார் , நம்பி கடன் கொடுக்கலாமா, வேறு ஏதாவது ஒரு வங்கியிலிருந்து கடன் வாங்கி அதைத் திரும்பக் கொடுக்காமல் போயிருக்கின்றாரா?, வழக்குகள் இருக்கிறதா?, அவரை யார் அறிமுகம் செய்கிறார்கள் போன்ற விஷயங்களையும் கவனிப்பார்கள்.
அடமானம்.( Collateral Security )

வாங்கும் கடனுக்கு ஈடாக அடமானம் கொடுக்கும் வகையில் தொழில் முனைவோரிடம் ஏதேனும் சொத்து இருக்கவேண்டும்.
மேற்சொன்ன நான்கு விஷயங்களிலும் எந்தப் பிரச்னையும் இல்லாமல் இருந்து, வங்கிகள் கேட்கும் மற்ற சில சான்றுகளையும் ( வருமானவரிச் சான்று )கொடுத்து விட்டால் , கடன் கிடைக்க வாய்ப்பு உண்டு.
No comments:
Post a Comment