
வெளிநாட்டில் வசிக்கும் இந்தியர்கள் தங்கள் தாய் நாட்டில் வீட்டுக் கடன் வாங்க சில விதிமுறைகள் உண்டு. வெளிநாடு வாழ் இந்தியர்கள் தங்கள் தாய் நாட்டில் உள்ள வங்கிகளில் வீட்டுக் கடன் பெறுவதில் சிரமம் ஒன்றும் இல்லை. நீங்கள் வெளிநாட்டில் தான் வசித்து வருகிறீர்கள் என்பதற்கான ஆதாரம் தான் மிகவும் முக்கியம்.
எங்கு வீட்டுக் கடன் பெறுவது?
பெரும்பாலான இந்திய வங்கிகளின் கிளைகள் வெளிநாடுகளில் உள்ளது. சில நாடுகளில் இந்திய வங்கிகளின் கிளைகள் இல்லாவிட்டாலும் அங்குள்ள வங்கிகளுடன் ஒப்பந்தம் செய்திருப்பார்கள். உதாரணமாக மஸ்கட்டில் உள்ள வங்கி ஒன்றுடன் ஹெச்டிஎப்சி வங்கி ஒப்பந்தம் செய்துள்ளது. தற்போது ஆன்லைனில் வீட்டுக் கடன் விண்ணப்பங்கள் உள்ளன. ஆனால் அதையும், தேவையான ஆவணங்களையும் நீங்கள் கூரியரில் அனுப்பி வைக்க வேண்டி இருக்கும்.
என்னென்ன ஆவணங்கள் தேவை?

வீட்டுக் கடன் வாங்கத் தேவையானவை:
புகைப்படத்துடன் கூடிய விண்ணப்பம். வேலைக்கான ஒப்பந்தத்தின் ஜெராக்ஸ். ஒரு வேளை ஒப்பந்தம் ஆங்கிலத்தில் இல்லை என்றால் அதை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து சமர்பிக்க வேண்டும். சமீபத்திய ஊதியச் சான்றிதழ் ஐடி கார்டின் ஜெராக்ஸ் அல்லது ஒர்க் பெர்மிட் ஜெராக்ஸ் சமீபத்திய ஒர்க் பெர்மிட்டின் ஜெராக்ஸ் பாஸ்போர்ட்டில் பதிவு செய்யப்பட்டுள்ள செல்லத்தக்க குடியுரிமை விசாவின் நகல் சொத்துக்கள் தொடர்பான ஆவணங்கள் புராசஸிங் கட்டண காசோலை நிலையான வேலை இருந்து மாதாமாதம் கடனை திருப்பி அடைக்க முடியும் என்றால் மட்டுமே வீட்டுக் கடன் வாங்கவும். இந்தியாவில் வசிப்பவர்களுக்கும், வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கும் வீட்டுக் கடனுக்கான வட்டி ஒன்று தான்.
* நண்பர்களே இப்பதிவு உங்களக்கு பிடித்திருந்தால் உங்களது கருத்துக்களை மறக்காமல் தெரிவிக்கவும்.
நன்றி :

No comments:
Post a Comment