share

Tuesday, June 2, 2015

பேப்பர் கப் தயாரிப்பு !

அதிகரித்து வரும் சுற்றுச்சூழல் விழிப்புணர்வால் யாருக்கு அதிக பலன் என்று கேட்டால் கண்ணை மூடிக்கொண்டு சொல்லிவிடலாம், பேப்பர் கப் தயாரிப்பவர் களுக்கு என்று!  டீ கடையில் ஆரம்பித்து, கல்யாண வீடு வரை தனக்கென ஒரு இடத்தைப் பிடித்துவிட்டது பேப்பர் கப்கள்.
சுகாதாரத்திற்கு சுகாதாரம், சுற்றுச் சூழலுக்கும் நல்லது என்ற இரட்டைக் காரணத்தால்  இதற்கான மவுசும் தேவையும் கூடிக்கொண்டே இருக்கிறது. திருமண வீடுகளில் மட்டுமல்ல, டீக்கடை களிலும் இதுதான் நிலைமை.
சந்தை வாய்ப்பு!

டீக்கடைகளில் கண்ணாடி கிளாஸ்களை பராமரிப்பதில் உள்ள சிரமத்தின் காரணமாக  பேப்பர் கப்கள் மிகச் சிறந்த மாற்றாகி உள்ளது. பெரும் பாலான அலுவலகங்களும் பேப்பர் கப்களுக்கு மாறிவிட்டதால், இதற்கான சந்தை வாய்ப்பு பிரகாசமாக உள்ளது. எனவே புதிதாகத் தொழில் தொடங்க நினைப்பவர்களுக்கு சரியான தேர்வாக இருக்கிறது இந்த பேப்பர் கப் தயாரிப்பு. உள்ளூர் மட்டுமல்லாமல் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் அளவுக்கு இந்த பிஸினஸில் வாய்ப்புகளும் அதிகம்.
தயாரிப்பு முறை!
மூலப் பொருளான பேப்பர் ரோல்களை வாங்கி மெஷின் மூலம் எளிதாக தயாரித்து விடலாம். மெஷினை இயக்கத் தெரிந்தால் போதுமானது. தயாரான கப்களை பேக்கிங் செய்துவிட்டால் மார்க்கெட்டுக்கு ரெடி!

முதலீடு!
இத்தொழிலைத் தொடங்கும் முதலீட்டாளர் கள் கையிலிருந்து ஐந்து சதவிகிதத் தொகையை முதலீடு செய்தால் போதுமானது. மீதி 95 சதவிகித தொகையை வங்கிக் கடன் மூலம் பெற்றுக் கொள்ளலாம். குறைந்தபட்சம் ஆறரை லட்சம் ரூபாய் முதலீடாகக் கொண்டு இத்தொழிலைத் தொடங்கலாம்.
மூலப்பொருள்!
இதன் முக்கிய மூலப்பொருளான பேப்பர் தமிழ்நாட்டிலேயே கிடைக்கிறது. இந்த பேப்பர் ரோலின் தரத்தைப் பொறுத்துத்தான் பேப்பர் கப்பின் தரமும் இருக்கும். ஜி.எஸ்.எம். அளவு களைப் பொறுத்தே இதன் தரம் இருக்கும்.

கட்டடம்!
இந்த பிஸினஸுக்கு அதிகளவில் இடம் தேவைப்படாது. குறைந்தபட்சம் 350 சதுரடி இடம் போதுமானது. கப்களைத் தயார் செய்யும் இடமும் சொந்தமாகவே இருக்க வேண்டும் என்பதில்லை. வாடகைக்கு இடம் கிடைத்தால்கூட போதுமானது. வழியில்லை எனில் வீட்டிலேயேகூட இயந்திரத்தை நிறுவி தயாரித்துக் கொள்ளலாம்.
இயந்திரம்!
பேப்பர் ரோல்களை இயந்திரத்தில் கொடுத்தால் விரும்பிய அளவிலான கப்கள் கிடைக்கும். இந்த இயந்திரங்கள் தமிழ்நாட்டி லேயே கிடைக்கிறது என்பது கூடுதல் சிறப்பு.
மானியம்!
பேப்பர் கப் தயாரிப்பு பிரதமரின் சுயவேலை வாய்ப்பு திட்டத்தின் கீழ் வருவதால் மானியம் கிடைக்கிறது. முதலீட்டு தொகையில் நகரம் எனில்  25%மும், கிராமம் எனில் 35 சதவிகிதமும் மானியம் கிடைக்கும். உதாரணமாக பத்துலட்ச ரூபாய் முதலீடு என்றால் இரண்டரை லட்ச ரூபாய் மானியமாக கிடைக்கும். இந்த மானியத் தொகையை நமது வங்கிக் கணக்கில் வரவு வைத்து விடுவார்கள். நான்கு வருடங்களுக்கு பிறகு இத்தொகையை நமது கடனில் வங்கி கழித்துக் கொள்ளும். மேலும் நாம் வங்கியில் வாங்கியிருக்கும் கடனில் மானியத் தொகை போக மீதமுள்ள தொகைக்கு வட்டி கட்டினால் போதுமானது. .  
உற்பத்தித் திறன்!
ஆண்டுக்கு 300 நாட்கள், நாள் ஒன்றுக்கு ஒரு ஷிஃப்ட் வீதம் வேலை பார்த்தால், 75 லட்சம் கப்களைத் தயாரிக்கலாம். இதற்கான மூலப்பொருளான ஒரு டன் பேப்பருக்கு 74,000 ரூபாய் செலவாகும்.
வேலையாட்கள்!
திறமையான வேலையாட்கள் - 2, சாதாரண வேலையாட்கள் - 8, மேலாளர் - 1 , விற்பனையாளர் - 1 என மொத்தம் 12 ஆட்கள் தேவைப்படும்.

மின்சாரம்!
ஒரு நாளைக்கு 69 யூனிட் மின்சாரம் தேவைப்படும்.. ஆண்டுக்கு 300 நாட்கள் வேலை செய்தால், 90% உற்பத்தித் திறனுக்கு 18,662 யூனிட் வரை செலவாகும். ஒரு நாளைக்கு எட்டு மணி நேரம் இயந்திர பயன்பாடு இருக்கும்.  
பிளஸ்!
* ஆண்டு முழுவதும்  தேவை இருக்கும்.  
* உடனடியாக விற்காவிட்டால் கெட்டுப்போய்விடும் என்ற பிரச்னை இல்லை. .
ரிஸ்க்!
* பலரும் இத்தொழிலில் இறங்க வாய்ப்புண்டு என்பதால் எதிர்காலத்தில் போட்டி அதிகமாகி, நாம் விற்கும் பொருட்களுக்கான விலை குறையலாம்.
* பேப்பர் விலை அதிகரிக்கும் பட்சத்தில் மூலப்பொருள் செலவு அதிகரித்து, விலை உயர்த்த வேண்டி வரும்.
* பேப்பர் கப்கள் மிக லேசானவை என்பதால் மிகுந்த ஜாக்கிரதையோடு கையாள வேண்டும்.
அதிகப்படியான நிலம் தேவையில்லை; வேலையாட்கள் தேவையில்லை; மிகப் பெரிய தயாரிப்பு முறையும் கிடையாது என்பதால் இளைஞர்கள், பெண்களுக்கு மிகவும் சாதகமான தொழில். குறிப்பாக சுயஉதவி  குழுக்கள்  மூலம் பொருட்களைத் தயாரிக்கும் பெண்கள் இத்தொழிலில் சுலபமாக இறங்கலாம்.
''படிப்பே தேவையில்லாத பிஸினஸ்!''
பிரசன்னா ஏ.வி.பி. பேப்பர்ஸ், திருச்சி
''இன்றைய தேதியில் பேப்பர் கப் தயாரிப்பு, போட்டியே இல்லாத தொழில் எனலாம். உள்ளூர் தேவையில் 5%கூட இன்னும் பூர்த்தியாகவில்லை. பெரிய டெக்னிக்கல் அறிவு தேவையில்லாத தொழில். படிப்பறிவு இல்லாத பெண்கள்கூட இதில் நுழைந்து லட்சக்கணக்கில் சம்பாதிக்கலாம். புதிதாக இந்தத் தொழிலில் இறங்குபவர்கள்கூட நல்ல லாபம் பார்க்க முடியும்.
சந்தை வாய்ப்பு என்று பார்த்தால் சாதாரண டீக்கடை முதல் பெரிய கார்ப்பரேட் நிறுவனம் வரை பேப்பர் கப்கள் பயன்படுத்தப்படுகின்றன. சாதாரணமாக ஒரு டீக்கடைக்கு  ஒரு நாளைக்கு 1,000 முதல் 2,000 கப்கள் தேவைப்படும். வெறும் 10 லட்சம் ரூபாய் முதலீட்டில் மாதம் 60,000 வரை லாபம் பார்க்கலாம். மெஷின் ஆபரேட்டருக்கு 15 நாட்கள் பயிற்சி போதுமானது. ஒரு நாளைக்கு ஒரு மெஷினில் அறுபதாயிரம் கப்கள் வரை தயாரிக்கலாம். ஒரு கப்புக்கு 5 பைசா லாபம் என வைத்துக் கொண்டாலும் தினசரி லாபமாக 3,000 ரூபாய் வரை கிடைக்கும். ஒரே மெஷினில் எல்லா அளவு கப்களும் செய்யலாம்.
உள்ளூர் என எடுத்துக் கொண்டால் 185 ஜி.எஸ்.எம். தரமுள்ள கப்புகளே போதும். ஏற்றுமதி செய்யும்போது ஒவ்வொரு நாட்டுக்கும் இந்த தரம் மாறுபடும். உதாரணத்துக்கு, அமெரிக்காவுக்கு 330 ஜி.எஸ்.எம். கப்கள்தான் ஏற்றுமதி செய்ய முடியும்.''
- க.ராஜீவ்காந்தி





3 comments:

  1. Sir,
    We supply PE (poly coated) coated cup blanks in any size an paper and any design with Gapless cutting, (sharp corner)single color & 2color food grade flexo ink printing available at best price.
    Available boards plain
    rate
    1) west coast = Rs. 85
    2) ITC = Rs. 87
    3) Century = Rs. 91
    All other brands like JK board, sheshasayee board also available.
    Per color Rs. 2.00 added per Kg.

    Bottom price

    1) west coast = Rs. 77
    2) ITC = Rs. 81
    3) Venkraft = Rs 68
    4) AP board = Rs 71

    Round corner blanks quotation
    Single color blanks offset printing with waste = 81/ kg
    Multi color blanks offset printing with waste = 85/ kg


    Payment terms
    70% advance should be paid with order confirmation & Balance must be paid before despatch

    Against c form sales 2% or vat 5%

    3% refundable caution deposit will be charge for c form

    All the price for ex factory @ sivakasi

    Apple cups
    Mani Murugaa Paper Converters
    S.Anand
    1/660 c , Munees nagar west,
    Sivakasi ~ 626124
    Mob :9488052702

    ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...