share

Tuesday, June 30, 2015

எந்த ஊரில் என்ன வாங்கலாம்! திருப்பூர்.(மின்னணு எடைதராசு )

உலகத்தையே தரமான பணியன் தொழில் மூலம் திரும்பி பார்க்க வைத்த திருப்பூரில் எலெக்ட்ரானிக் தராசுகள், குறைந்த விலையில் சிறந்த தரத்துடன் மேடை தராசுகள், மேஜை தராசுகள், எடை தராசுகள் தயாரித்து விற்கபடுகிறது.


மேலும் ஆட்டு பண்ணைஆடு வளர்போர், பண்ணை ஆடுகள் 
மற்றும் அணைத்து விதமான கால்நடைகள், வளர்ப்பு பிராணிகள், விலங்குகள். செல்ல பிராணிகளுக்கு தேவையான எடை பார்க்கும் கருவிகள், எடைதராசுகள்  போன்றவற்றை  சிறந்த முறையில்  

பிரத்தேயேகமாக தயாரிக்கப்பட்ட எடைதராசுகள்  திருப்பூரில் கிடைப்பது தனி சிறப்பாகும்.
  முக்கியமாக ஆடு எடைதராசு

இன்றைய வியாபார உலகில், ஆடு வளர்ப்பு, பண்ணை ஆடுகள் போன்றைவை முக்கிய  இடமாக வளர்ச்சி பாதையில் உள்ளது. ரியல் எஸ்டேட் போன்று  இன்று  பலறும் இலாபம்   ஈட்டும் வகையில் இவற்றில்   ஈடுபட்டுள்ளனர். ஆனால், ஆட்டின் வளர்ச்சி, ஆரோக்கியம் ஆகிவற்றை கண்காணிக்கவும், ஆடுகளை வாங்க, விற்க முற்படும்போது அதன் துள்ளிய எடையளவை தெரிந்துகொள்ள எடைதராசு மிகவும்  முக்கியும் அதற்க்காக பிரதேயேகமாக  பல வடிவில், எண்ணற்ற அளவில், சிறந்த முறையில், நல்ல தரத்தில், துள்ளிய எடையளவை கண்காணிக்கும் எடைதராசை நமக்கு தேவையான அளவுகளில் தயாரித்து வழங்கபடுகிறது...
 ஆடு எடைதராசு அளவு : 900 * 1100 mm
 எடையளவு : 300 கிலோ
 துள்ளியம் : 100 கிராம்

  சிறப்பம்சம் :
 * MS - கணமான எடைமேடை
 * ஆடுகளுக்கு நிற்க  வசதியாக நாலாபுற கூண்டு வடிவமைப்பு
 * நீடித்து உழைக்கும் திறன்
 * 1 வருட உத்திரவாதம்.
 * இலவச இன்ஷ்டலேசன் (Installation) மற்றும் டோர் டெலிவரி (Door Delivery)
  


 மேலும் விபரம் அறிய :
 தொடர்புக்கு : உமா டெக் ஸ்கேல்ஸ், +91-8220572205

Friday, June 26, 2015

பணத்தைப் பெருக்க 10 கட்டளைகள் !



இதோ அந்த பத்து கட்டளைகள்...
1. பல வழிகளில் இருந்து (உதாரணமாக, சம்பளம், வட்டி, வாடகை போன்றவை) உங்களுக்கு வருமானம் வரலாம். அனைத்தையும் சமமாக நினையுங்கள். உங்களுக்குத் தேவையில்லாதப் பொருட்களை வாங்காதீர்கள். வாழ்க்கையானாலும் அல்லது பணமானாலும் திட்டமிடுங்கள், அதை ஓர் உள்ளார்ந்த தைரியம், அன்பு, கடமை உணர்ச்சியுடன் பின்பற்றுங்கள்.

2. முதலீட்டுக்காக இன்ஷூரன்ஸ் பாலிசி எடுக்காதீர்கள். முதலீடு வேறு, பாதுகாப்பு வேறு. வீரன் எப்படி நாட்டைப் பாதுகாப்பானோ, அது போல உங்களையும், குடும்பத்தினரையும், உங்கள் சொத்தையும் அனைத்துவித தாக்குதலில் இருந்தும் காப்பது இன்ஷூரன்ஸ். தேவைக்கேற்ற மாதிரி யான இன்ஷூரன்ஸ் எடுங்கள்.
டேர்ம் இன்ஷூரன்ஸ் எடுத்தால் குறைந்த பிரீமியம், அதிக கவரேஜ் கிடைக்கும். மணி பேக் பாலிசி’ எடுத்தால், அதன் மூலம் கிடைக்கும் ஆதாயம் பணவீக்கத்துடன் ஒப்பிடும்போது மிகவும் சொற்பமே.
இன்ஷூரன்ஸ் நிறுவனங்கள் நிதி நிர்வாகத்தில் மிகவும் மோசமானவை.

3. எந்தவொரு சொத்து வாங்கும் போதும் அதன்மூலம் வருமானம் கிடைக்குமா எனப் பாருங்கள். சொத்து என்றைக்கும் பொறுப்பாக மாறக்கூடாது (உதாரணம், கடன் வாங்கி இடம் வாங்குவது. இதனால் கடனுக்கு வட்டி, சொத்து வரி எனக் கட்ட வேண்டிவரும். அந்தச் சொத்தை விற்றால் ஒழிய, உங்களுக்கு அதிலிருந்து வருமானமோ/ஆதாயமோ எதுவும் கிடைக்காது. அதை விற்பது வரை அது ஒரு 'டெட் அஸெட்’).

4. உங்கள் வருமானத்தைச் சரியான சொத்துகளில் முதலீடு செய்ய வேண்டும் (அதாவது, வங்கி டெபாசிட்டில் எவ்வளவு, பங்குகளில் எவ்வளவு, ரியல் எஸ்டேட்டில் எவ்வளவு போன்றவை). நீங்கள் பணத்தை மதித்தால் பணமும் உங்களை மதித்து உங்களிடமே பலமடங்காகத் திரும்பிவரும். 'அஸெட் அலோகேஷனில்’ நீங்கள் தெளிவாக இருந்தால் உங்களது வருமானம் அல்லது பணம் 90% சிறப்பாக நிர்வகிக்கப்படும்.

5. சேமிப்பையும், முதலீட்டையும் போட்டுக் குழப்பிக்கொள்ளாதீர்கள். செலவைக் குறைத்து சொத்தை நீங்கள் பெருக்கிக்கொள்ளலாம். ஆனால், அதன்மூலம் வரும்படிக்கு வழியிருக் கிறதா என்று பார்க்க வேண்டும்.
அப்படி எதுவுமில்லை என்றால், அந்தச் சொத்தில் முதலீடு செய்வதில் உபயோக மில்லை. 'தேவையற்றதை வாங்குவதன் மூலம் தேவைப்படுவதை விற்க வேண்டிய கட்டாயம் பின்னாளில் ஏற்படக்கூடும்’ என்பதைக் கவனத்தில் வைத்துக் கொள்ளுங்கள்.

6. ஏதேனும் சொத்தில் முதலீடு செய்யும்போது அதிலிருந்து தொடர்ந்து வருமானம் (running income) வருமாறு பார்த்துக்கொள்ள வேண்டும். ஸ்பெகுலேட்டிவ் சம்பந்தப்பட்ட விஷயங்களில் முதலீடு செய்யலாம். ஆனால், அது அளவோடு இருக்க வேண்டும். (தங்கத்தில் முதலீடு செய்வது அவ்வளவு சிறந்தது அல்ல. அதற்கான பல காரணங்களில் ஒன்று, தங்கத்தின் விலை உலகளவில் நிர்ணயிக்கப்படுகிறது. டாலர்/ரூபாய் மதிப்பில் ஏற்படும் மாற்றங்கள் பெரும்பாலும் சாதகமாக இருப்பதில்லை.)

7. பங்குச் சந்தையில் முதலீடு செய்தால் பொறுமைகாக்க வேண்டியிருக்கும். அதுபோல, `Short term pain’-ஐ ‘long term gain’ ஆக்க பொறுமை அவசியம் தேவை. எது பங்கின் விலையைக் கூட்டுகிறது, குறைக்கிறது என்பதை நன்கு அறிந்துகொண்டு அதற்கேற்ப முதலீடு செய்ய வேண்டும். அதுபோல முதலீட்டுக்கும், ஊகத்துக்குமான வித்தியாசம் தெரிந்திருக்க வேண்டும்.

8. வீடு வாங்குவதாக இருந்தால், பிராபர்ட்டி மார்க்கெட் மலிவாக இருக்கும்போது வாங்குங்கள். அதேசமயம், வட்டி விகிதம் உச்சத்தை அடைவதற்கு முன்பாக நல்லதொரு வட்டி விகிதத்தை – 'ஃபிக்ஸட்' அல்லது ஃப்ளோட்டிங்’ – தேர்ந்தெடுங்கள்.

9. உங்கள் பணத்தின்மேல் குறியாக இருக்கும் அரசாங்கம் (பலவிதமான வரிகள் மூலம் உங்கள் வருமானத்தில் கைவைப்பது), வங்கிகள் (கடன் வழங்குவது, முதலீடு செய்யச் சொல்வது), புரோக்கர்கள் ஆகியோரை எப்படிக் கையாள்வது என்பதைக் கற்றுக்கொள்ளுங்கள்.
சட்டப்பூர்வமான வழியில் அதிகப் பணம் ஈட்டி அதற்குக் குறைந்த அளவில் வரி கட்டுவது எப்படி என்பதை அறிந்துகொள்ள வேண்டும்.

10. இந்தப் பயணத்தின் இறுதியில் நண்பன் விஜய் கூறியதுபோல, டாக்டர் ஜான் கங்கோத்ரி ஆசிரமத்துக்குச் சென்று அங்குள்ள சுவாமிஜியை அணுக, 'பணம் உனக்கு சுதந்திரம் அளிக்காது. மாறாக, அது உன்னை அடிமையாக்கும். எனவே, நீ பணத்தை ஆளுபவனாக இரு; அதைப் பார்த்து பயப்படாதே, அதற்குப் பின்னால் பேராசை பிடித்து ஓடாதே. நமது பிரச்னைகளுக்குத் தீர்வு நிதி பற்றிய அறிவுதானே தவிர, பணம் இல்லை’ என்று கூறுகிறார்.
 ஆக, பணம் சம்பாதிப்பதைவிட பெரிய விஷயம் 'தீர்க்கமாகத் திட்டமிட்டுப் பணத்தைப் பெருக்கி’ அதை நமக்குச் சேவகம் செய்ய வைப்பதுதான். 'நாம் தேவையற்ற பொருட்களை வாங்கினால், விரைவிலேயே நமக்குத் தேவையான பொருட்களை விற்க நேரிடும்’ என்று நிதி உலகின் பிதாமகன் வாரன் பஃபெட் கூறியதை மனதில் வைத்துக்கொண்டு, அநாவசியச் செலவைக் குறைத்து அத்தியாவசியத்தில் முதலீடு செய்தால்  நீங்களும் வாழ்க்கையில் ஜெயிக்கலாம்!

 நன்றி-
நாணயம் விகடன்

Tuesday, June 2, 2015

பேப்பர் கப் தயாரிப்பு !

அதிகரித்து வரும் சுற்றுச்சூழல் விழிப்புணர்வால் யாருக்கு அதிக பலன் என்று கேட்டால் கண்ணை மூடிக்கொண்டு சொல்லிவிடலாம், பேப்பர் கப் தயாரிப்பவர் களுக்கு என்று!  டீ கடையில் ஆரம்பித்து, கல்யாண வீடு வரை தனக்கென ஒரு இடத்தைப் பிடித்துவிட்டது பேப்பர் கப்கள்.
சுகாதாரத்திற்கு சுகாதாரம், சுற்றுச் சூழலுக்கும் நல்லது என்ற இரட்டைக் காரணத்தால்  இதற்கான மவுசும் தேவையும் கூடிக்கொண்டே இருக்கிறது. திருமண வீடுகளில் மட்டுமல்ல, டீக்கடை களிலும் இதுதான் நிலைமை.
சந்தை வாய்ப்பு!

டீக்கடைகளில் கண்ணாடி கிளாஸ்களை பராமரிப்பதில் உள்ள சிரமத்தின் காரணமாக  பேப்பர் கப்கள் மிகச் சிறந்த மாற்றாகி உள்ளது. பெரும் பாலான அலுவலகங்களும் பேப்பர் கப்களுக்கு மாறிவிட்டதால், இதற்கான சந்தை வாய்ப்பு பிரகாசமாக உள்ளது. எனவே புதிதாகத் தொழில் தொடங்க நினைப்பவர்களுக்கு சரியான தேர்வாக இருக்கிறது இந்த பேப்பர் கப் தயாரிப்பு. உள்ளூர் மட்டுமல்லாமல் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் அளவுக்கு இந்த பிஸினஸில் வாய்ப்புகளும் அதிகம்.
தயாரிப்பு முறை!
மூலப் பொருளான பேப்பர் ரோல்களை வாங்கி மெஷின் மூலம் எளிதாக தயாரித்து விடலாம். மெஷினை இயக்கத் தெரிந்தால் போதுமானது. தயாரான கப்களை பேக்கிங் செய்துவிட்டால் மார்க்கெட்டுக்கு ரெடி!

முதலீடு!
இத்தொழிலைத் தொடங்கும் முதலீட்டாளர் கள் கையிலிருந்து ஐந்து சதவிகிதத் தொகையை முதலீடு செய்தால் போதுமானது. மீதி 95 சதவிகித தொகையை வங்கிக் கடன் மூலம் பெற்றுக் கொள்ளலாம். குறைந்தபட்சம் ஆறரை லட்சம் ரூபாய் முதலீடாகக் கொண்டு இத்தொழிலைத் தொடங்கலாம்.
மூலப்பொருள்!
இதன் முக்கிய மூலப்பொருளான பேப்பர் தமிழ்நாட்டிலேயே கிடைக்கிறது. இந்த பேப்பர் ரோலின் தரத்தைப் பொறுத்துத்தான் பேப்பர் கப்பின் தரமும் இருக்கும். ஜி.எஸ்.எம். அளவு களைப் பொறுத்தே இதன் தரம் இருக்கும்.

கட்டடம்!
இந்த பிஸினஸுக்கு அதிகளவில் இடம் தேவைப்படாது. குறைந்தபட்சம் 350 சதுரடி இடம் போதுமானது. கப்களைத் தயார் செய்யும் இடமும் சொந்தமாகவே இருக்க வேண்டும் என்பதில்லை. வாடகைக்கு இடம் கிடைத்தால்கூட போதுமானது. வழியில்லை எனில் வீட்டிலேயேகூட இயந்திரத்தை நிறுவி தயாரித்துக் கொள்ளலாம்.
இயந்திரம்!
பேப்பர் ரோல்களை இயந்திரத்தில் கொடுத்தால் விரும்பிய அளவிலான கப்கள் கிடைக்கும். இந்த இயந்திரங்கள் தமிழ்நாட்டி லேயே கிடைக்கிறது என்பது கூடுதல் சிறப்பு.
மானியம்!
பேப்பர் கப் தயாரிப்பு பிரதமரின் சுயவேலை வாய்ப்பு திட்டத்தின் கீழ் வருவதால் மானியம் கிடைக்கிறது. முதலீட்டு தொகையில் நகரம் எனில்  25%மும், கிராமம் எனில் 35 சதவிகிதமும் மானியம் கிடைக்கும். உதாரணமாக பத்துலட்ச ரூபாய் முதலீடு என்றால் இரண்டரை லட்ச ரூபாய் மானியமாக கிடைக்கும். இந்த மானியத் தொகையை நமது வங்கிக் கணக்கில் வரவு வைத்து விடுவார்கள். நான்கு வருடங்களுக்கு பிறகு இத்தொகையை நமது கடனில் வங்கி கழித்துக் கொள்ளும். மேலும் நாம் வங்கியில் வாங்கியிருக்கும் கடனில் மானியத் தொகை போக மீதமுள்ள தொகைக்கு வட்டி கட்டினால் போதுமானது. .  
உற்பத்தித் திறன்!
ஆண்டுக்கு 300 நாட்கள், நாள் ஒன்றுக்கு ஒரு ஷிஃப்ட் வீதம் வேலை பார்த்தால், 75 லட்சம் கப்களைத் தயாரிக்கலாம். இதற்கான மூலப்பொருளான ஒரு டன் பேப்பருக்கு 74,000 ரூபாய் செலவாகும்.
வேலையாட்கள்!
திறமையான வேலையாட்கள் - 2, சாதாரண வேலையாட்கள் - 8, மேலாளர் - 1 , விற்பனையாளர் - 1 என மொத்தம் 12 ஆட்கள் தேவைப்படும்.

மின்சாரம்!
ஒரு நாளைக்கு 69 யூனிட் மின்சாரம் தேவைப்படும்.. ஆண்டுக்கு 300 நாட்கள் வேலை செய்தால், 90% உற்பத்தித் திறனுக்கு 18,662 யூனிட் வரை செலவாகும். ஒரு நாளைக்கு எட்டு மணி நேரம் இயந்திர பயன்பாடு இருக்கும்.  
பிளஸ்!
* ஆண்டு முழுவதும்  தேவை இருக்கும்.  
* உடனடியாக விற்காவிட்டால் கெட்டுப்போய்விடும் என்ற பிரச்னை இல்லை. .
ரிஸ்க்!
* பலரும் இத்தொழிலில் இறங்க வாய்ப்புண்டு என்பதால் எதிர்காலத்தில் போட்டி அதிகமாகி, நாம் விற்கும் பொருட்களுக்கான விலை குறையலாம்.
* பேப்பர் விலை அதிகரிக்கும் பட்சத்தில் மூலப்பொருள் செலவு அதிகரித்து, விலை உயர்த்த வேண்டி வரும்.
* பேப்பர் கப்கள் மிக லேசானவை என்பதால் மிகுந்த ஜாக்கிரதையோடு கையாள வேண்டும்.
அதிகப்படியான நிலம் தேவையில்லை; வேலையாட்கள் தேவையில்லை; மிகப் பெரிய தயாரிப்பு முறையும் கிடையாது என்பதால் இளைஞர்கள், பெண்களுக்கு மிகவும் சாதகமான தொழில். குறிப்பாக சுயஉதவி  குழுக்கள்  மூலம் பொருட்களைத் தயாரிக்கும் பெண்கள் இத்தொழிலில் சுலபமாக இறங்கலாம்.
''படிப்பே தேவையில்லாத பிஸினஸ்!''
பிரசன்னா ஏ.வி.பி. பேப்பர்ஸ், திருச்சி
''இன்றைய தேதியில் பேப்பர் கப் தயாரிப்பு, போட்டியே இல்லாத தொழில் எனலாம். உள்ளூர் தேவையில் 5%கூட இன்னும் பூர்த்தியாகவில்லை. பெரிய டெக்னிக்கல் அறிவு தேவையில்லாத தொழில். படிப்பறிவு இல்லாத பெண்கள்கூட இதில் நுழைந்து லட்சக்கணக்கில் சம்பாதிக்கலாம். புதிதாக இந்தத் தொழிலில் இறங்குபவர்கள்கூட நல்ல லாபம் பார்க்க முடியும்.
சந்தை வாய்ப்பு என்று பார்த்தால் சாதாரண டீக்கடை முதல் பெரிய கார்ப்பரேட் நிறுவனம் வரை பேப்பர் கப்கள் பயன்படுத்தப்படுகின்றன. சாதாரணமாக ஒரு டீக்கடைக்கு  ஒரு நாளைக்கு 1,000 முதல் 2,000 கப்கள் தேவைப்படும். வெறும் 10 லட்சம் ரூபாய் முதலீட்டில் மாதம் 60,000 வரை லாபம் பார்க்கலாம். மெஷின் ஆபரேட்டருக்கு 15 நாட்கள் பயிற்சி போதுமானது. ஒரு நாளைக்கு ஒரு மெஷினில் அறுபதாயிரம் கப்கள் வரை தயாரிக்கலாம். ஒரு கப்புக்கு 5 பைசா லாபம் என வைத்துக் கொண்டாலும் தினசரி லாபமாக 3,000 ரூபாய் வரை கிடைக்கும். ஒரே மெஷினில் எல்லா அளவு கப்களும் செய்யலாம்.
உள்ளூர் என எடுத்துக் கொண்டால் 185 ஜி.எஸ்.எம். தரமுள்ள கப்புகளே போதும். ஏற்றுமதி செய்யும்போது ஒவ்வொரு நாட்டுக்கும் இந்த தரம் மாறுபடும். உதாரணத்துக்கு, அமெரிக்காவுக்கு 330 ஜி.எஸ்.எம். கப்கள்தான் ஏற்றுமதி செய்ய முடியும்.''
- க.ராஜீவ்காந்தி





Monday, June 1, 2015

நல்ல வருமானம் தரும் நர்சரி கார்டன் தொழில் !


கிராமப்புறங்களில் பசுமை இயற்கையாகவே கொட்டிக் கிடக்கிறது. ஆனால், நகர்ப்புறங்களில் பசுமை என்பது எட்டாக்கனிதான். நகர்ப்புற வீடுகள் கான்கிரீட் வனங்களாகிவிட்டன என்று சொன்னால் அது மிகையில்லை.
எனவேதான் வீட்டில் பசுமையை ஏற்படுத்த ஜன்னல், முகப்பு, முற்றம், வராந்தா, வரவேற்பறை, கார் நிறுத்துமிடம், சுற்றுச்சுவர் என பல இடங்களில் பூச்செடிகள், பசுமை தரும் செடிகள் இவற்றை வைப்பதில் ஆர்வம் காட்டத் தொடங்கியுள்ளனர்.
உயர்தட்டு மக்கள், நடுத்தர வருவாய்ப் பிரிவினர், நிறுவனங்கள், தொழிற்கூடங்கள் என அனைத்து தரப்பிலும் இவற்றை வைப்பதற்கான ஆர்வம் அதிகரித்து வருகிறது.
மக்களிடையே வரவேற்பு அதிகம் இருப்பதால்,நர்சரி தோட்டம் வளர்ப்புத் தொழில் நல்ல லாபம் தரும் தொழிலாக வளர்ந்து வருகிறது.
நர்சரி என்றால் தமிழில் நாற்றுப்பண்ணை என்று பொருள். செடி வளர்க்கும் முறையை கற்றுக் கொண்டு இந்த நர்சரி கார்டன் தொழிலை நடத்தினால் நல்ல லாபம் பார்க்கலாம்.
வருடம் முழுவதும் வருமானம் தரக்கூடிய நர்சரி கார்டன் தொழிலுக்கு பெரிய அளவில் முன் அனுபவம் தேவையில்லை.
அருகில் உள்ள தோட்டக்கலை பண்ணையை அணுகி, செடி வளர்க்கும் முறையை எளிதாக கற்றுக்கொள்ள முடியும்.
முதலீடும் குறைந்த அளவே தேவைப்படும். தோட்டம் தொடர்பான அழகியல் உணர்வு இருந்தால் இத்தொழிலில் கொடிகட்டி பறக்கலாம்.
செடிகளை வளர்க்க 4 முதல் 5 சென்ட் இடம் தேவைப்படும். செடிகளை வெயிலில் இருந்து பாதுகாக்க நிழல் வலைக்கூண்டு அமைக்க வேண்டும்.
இதற்கு குறைந்தபட்சம் ரூ.30 ஆயிரம் செலவாகும். பனிக்கூடாரம் அமைக்க ரூ.50 ஆயிரம் செலவாகும். பூக்கும் செடிகளுக்கான மறைமுக வெயில் தரும் கூடாரம் ரூ.30 ஆயிரம் செலவாகலாம்.
150 பூந்தொட்டிகளுக்கும், பூச்செடிகளை வைப்பதற்கான பாலிதீன் கன்டெய்னர்களும் வாங்க ரூ.10 ஆயிரம் செலவாகும்.
இவை தவிர பாதுகாப்பு வேலி, மண் சமப்படுத்தும் கருவி, தண்ணீர் இறைக்கும் மோட்டார், பைப் போன்ற செலவுகளும் உண்டு. தோராயமாக ரூ.2 லட்சம் வரை தேவைப்படும். இது அடிப்படை கட்டமைப்புக்கான முதலீடு.
குறைந்தபட்சம் ரூ 20 ஆயிரம் கொண்டு பொதுவாக மக்கள் பயன்படுத்தக்கூடிய பூச்செடிகள், பழம் தரும் செடிகள், மூலிகைச் செடிகள், அலங்காரச் செடிகள், நிழற்சாலை மரங்கள், வீட்டினுள் வைக்கக்கூடிய செடிகள், பூங்கொத்துச் செடிகள், புல் வகைகள் உள்ளிட்ட செடிகளை வாங்கி வளர்க்கலாம்.
மிக அதிக விலையுள்ள செடிகளை ஆர்டரின் பேரில் வாங்கி கொடுத்தால் போதும். 2 தொழிலாளர்கள் தேவை. செடிகள் டெலிவரி செய்ய சிறு வாகனம் ஒன்று இருந்தால் விரைவாக பணி நடக்கும்.
இத்தொழிலுக்கு தேசிய தோட்டக்கலை இயக்குனரகத்தில் மானியத்துடன் கடன் பெற முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
வளர்க்கும் செடிகளுக்கு சரியான பராமரிப்பு அவசியமாகும். சரியான நேரத்தில் தண்ணீர் தெளிப்பதும்,உரமிடுவதும் நிகழ வேண்டும். 25 தினங்களுக்கு ஒரு முறை மண்புழு உரம், இயற்கை உரம், வேப்பம்புண்ணாக்கு சமஅளவு கலந்து உரமிட வேண்டும்.
செடிகளில் ஈரப்பதம் எப்போதும் இருக்க வேண்டும். கோடை காலத்தில்தான் செடிகளின் வளர்ச்சி நன்றாக இருக்கும். மழைக்காலத்தில் செடிகள் செழிப்பாக இருக்கும்.
நோய் இருந்தால் கிளைகளை வெட்டி வெயில் இல்லாத நேரங்களில் மருந்து தெளிக்க வேண்டும். பூந்தொட்டிகளை குறிப்பிட்ட தினங்களுக்கு ஒருமுறை மாற்ற வேண்டும்.
அழகு செடிகளைப் பயிர் பெருக்கம் செய்வதற்கு தண்டு துண்டு முறை, பதியம் போடுதல், பாகம் பிரிப்பு, மொட்டு கட்டுதல், ஒட்டு கட்டுதல் போன்ற முறைகளை கையாளலாம்.
இலைகள் மூலம் குறைந்த செலவில் தரமான நாற்றுக்களை உற்பத்தி செய்வோரும் உண்டு. ஒரு செடியில் உள்ள இலைகளைக் கொண்டே சுமார் 500 செடிகள் வரை உற்பத்தி செய்வது இந்த முறையில் சாத்தியமாகும், செடிகளிலிருந்து இலைகளை எடுத்து மண் நிரம்பிய பாலீதீன் பைகளில் போட்டு நிழற் கூடத்தில் வைத்து பராமரிக்க வேண்டும் இலைகளிலிருந்து வேர் துவங்கி 50 நாட்களில் செடி உற்பத்தியாகும்.
நர்சரிகார்டனில் செடிகள் மட்டுமின்றி தென்னை, மா, சப்போட்டா போன்ற மர நாற்றுக்களையும் வளர்த்தால் கூடுதல் வருமானம் பெறலாம்.
தேடிவரும் வாடிக்கையாளர்கள் மட்டுமின்றி குடியிருப்பு பகுதிகள், வணிக நிறுவனங்கள் போன்ற இடங்களில் நேரடியாக தொடர்பு கொண்டு ஆர்டர் எடுத்து டெலிவரி செய்தால் அதிக வருமானம் ஈட்ட முடியும்.


நன்றி :
 

தொழில் முனைவோருக்கு `டின்’ அவசியமா ?

வரி செலுத்துபவர் அடையாள எண் (Taxpayer Identification Number) என்பதைத்தான் டின் நம்பர் என்று சுருக்கமாகக் குறிப்பிடுகிறோம். புதிதாக தொழில் தொடங்க விரும்புபவர்கள் தங்களது தொழிலை மாநில அரசிடம் பதிவு செய்து இந்த எண்ணை வாங்க வேண்டும்.
ஏற்கெனவே தொழில் செய்து கொண்டிருப்பவர்களும் அதை முறைப்படுத்தப்பட்ட வகையில் செய்வதற்கு டின் நம்பர் அவசியம். உற்பத்தி, சேவை, வர்த்தகம் என எந்த தொழில் வடிவமாக இருந்தாலும் டின் நம்பர் அவசியம். மாநில அரசின் வணிகவரித் துறை மூலமாக இது வழங்கப்படுகிறது. தொழில் நிறுவனம் பதிவு செய்யப்படும் மாநிலத்தில்தான் டின் நம்பர் வாங்க வேண்டும்.
பிற மாநிலங்களிலும் தொழில் செய்ய வேண்டும் என்றால் தனியாக மத்திய விற்பனை வரி எண் பதிவு செய்து கொள்ள வேண்டும். ஆன்லைன் மூலமாக பதிவு செய்யலாம். தமிழ்நாடு முழுவதும் உள்ள அந்தந்த பகுதி வணிகவரி அலுவலகங்கள் மூலமாக விண்ணப்பிக்க வேண்டும்.
இந்த எண் பதினோரு இலக் கங்களைக் கொண்டது. ஒவ்வொரு இலக்கத்துக்கும் ஒரு குறியீடு உள்ளது. இந்த எண் மதிப்பு கூட்டு வரி விதிப்பு (வாட்) கணக்கோடு தொடர்பு கொண்டது.
ஏன் வேண்டும் டின்?
உற்பத்தியாளர்கள், முகவர்கள், வர்த்தகர்கள், ஏற்றுமதி செய்பவர்கள் என வர்த்தக நடவடிக்கைகளில் ஈடுபடும் அனைவரும் இந்த அனுமதி வாங்க வேண்டும். அரசுக்கு வணிக வரியை முறையாக செலுத்திவிட்டு இந்த தொழிலை செய்கிறோம் என்பதற்கான அடையாளம் இது. ஒரு தொழில்முனைவர் தனது உற்பத்திக்கு தேவையான மூலப் பொருட்களை வரி கொடுத்துத் தான் வாங்குகிறார்.
அதுபோல பயனாளிகளிடம் வரியை வாங்கிக் கொண்டுதான் விற்பனை செய்கிறார். குறிப்பிட்ட டின் எண்ணி லிருந்து இந்த வரி வசூலிக்கப்பட்டுள்ளது என்பதை வாடிக்கையாளருக்கும் அரசுக்கும் தெரியப்படுத்த இது உதவுகிறது.
டின் நம்பர் பெறுவதற்கான விண்ணப்பதாரரின் புகைப்படம், குடும்ப அட்டை நகல், PAN கார்டு நகல், சொத்து தொடர்பான ஆவணங்கள் நகல், வாடகை ஒப்பந்த பத்திரம் நகல் ஆகியவை விண்ணப்பத்தோடு இணைக்க வேண்டும்.
மேலும் வணிகவரி துறையின் Form F Form A விண்ணப்பங்களை வாங்கி பூர்த்தி செய்யவேண்டும். நாம் மேற்கொள்ள உள்ள தொழிலுக்கு ஏற்ப கட்டணங்கள் இருக்கும். இந்த கட்டணத்திற்கு மட்டும் வணிகவரித்துறை பெயரில் வங்கி வரைவோலை கொடுக்க வேண்டும். ஏற்கனவே டின் நம்பர் வைத்திருக்கும் இரண்டு நபர்களின் பரிந்துரைக் கடிதத்தை நமது விண்ணப்பத்தோடு இணைக்க வேண்டும்.
ஆவணங்கள் சரிபார்ப்புக்குப் பிறகு டின் நம்பர் நமக்கு வழங்கப்படும். ஒரே வாரத்தில் முகவரி தேடி நமக்கு டின் நம்பர் சர்டிபிகேட் வந்துவிடும் ஒரு பான் எண்ணுக்கு ஒரு டின் நம்பர் மட்டுமே வழங்கப்படும்.
இந்த எண்ணை அடிப்படையாக வைத்து ஒருவர் பல தொழில்களையும் செய்யலாம். ஆனால், டின் எண் வாங்கியவரின் பெயரில்தான் இந்த தொழில்கள் தொடங்க வேண்டும். ஒருவரது பெயரில் வாங்கப்பட்ட டின் நம்பரை வைத்து கூட்டாகத் தொழில் செய்ய பயன்படுத்த முடியாது. ஒரே டின் எண்ணின் அடிப்படையில் புதிய தொழில் தொடங்கும்போது வணிக வரித் துறைக்கு கடிதம் மூலமாகத் தெரிவித்துவிட வேண்டும்.
டின் எண் வாங்குவது சிரமமான வேலையல்ல, இதற்கென உள்ள முகவர்கள் மூலமாக எடுத்துக் கொள்ள லாம். மேலும் தொழில் ஆலோசகர்கள், எம்எஸ்எம்இ அலுவலகங்கள், டான்ஸ்டியா அலுவலகங்கள் மூல மாகவும் டின் நம்பர் எடுத்துக் கொள்ளலாம்.

நன்றி :


அதிக தள்ளுபடி தருவது எப்படி?

ஆன்லைன் வர்த்தக சந்தையை (e-commerce) நோக்கி வாடிக்கையாளர்கள் படையெடுப்பதற்கு அதிகபட்ச தள்ளுபடி அளிப்பதே பிரதான காரணம் என்று சொல்லமுடியும்.
தள்ளுபடி செயல்முறை
பிளிப்கார்ட், அமேசான், ஸ்நாப்டீல் போன்ற நிறுவனங்களில் அந்நிய நேரடி முதலீடு இருப்பதால், இந்நிறுவனங்கள் நேரடி சில்லறை வியாபாரத்தில் ஈடுபட முடியாது, எனவே இவற்றின் இணையதளங்கள் market place என்ற வகையில் விற்பனையாளருக்கும் வாடிக்கையாளருக்கும் ஓர் இணைப்புப் பாலமாக இருக்கின்றனர். இதில் விற்பனையாளர் குறிப்பிடும் விலையே இணையத்தில் இருக்கும்.
எனவே விற்பனையாளர்தான் தள்ளுபடி கொடுப்பதாக இந்நிறுவனங்கள் கூறுகின்றன. மேலும் விற்பனையாளர்கள் இந்நிறுவனங்களின் இணையத்தை பயன்படுத்தவும், பொருட்களை வாடிக்கையாளருக்குக் கொண்டு செல்லவும் வியாபாரிகள் இவர்களுக்கு கமிஷன் தருவதாகக் கூறப்படுகிறது.
``Mint’’ என்ற ஆங்கில நாளிதழ் இந்நிறுவனங்கள் எப்படி விலைக் கழிவுக் கொடுக்கின்றன என்று உறுதி செய்யப்படாத ஒரு செய்தியை வெளியிட்டது. விற்பனையாளர்களை தள்ளுபடி கொடுக்கச்சொல்லி நிறுவ னங்கள் கூறுகின்றன. அவ்வாறு விலைக்கழிவினால் ஏற்படும் நஷ்டத்தை வணிக மேம்பாட்டுச் செலவுகள் என்று இந்நிறுவனங்கள் வியாபாரிகளுக்கு அளித்து ஈடுசெய்கின்றன. அல்லது தங்களுக்கு அளிக்க வேண்டிய கமிஷன் தொகையை குறைத்துகொள்கின்றன. இவ்வாறு ஆன்லைன் வர்த்தக நிறுவனங்கள்தான் விலைக்கழிவை மறைமுகமாகத் தருவதாக செய்தி வெளியிட்டுள்ளது.
பலநேரங்களில் இந்த ஆன்லைன் நிறுவனங்களே தங்கள் நிழல் நிறுவனங்கள் மூலம் பொருட்களை வாங்கி அதிக தள்ளுபடிகொடுத்து விற்கின்றனவோ என்ற சந்தேகமும் உண்டு. பிளிப்கார்ட் நிறுவனத்தின் இணையதளத்தில் 75% வியாபாரம் WS Retail என்ற நிறுவனம் செய்கிறது. WS Retail நிறுவனத்தில் பிளிப்கார்டின் உரிமையாளர்கள் பெரும் பங்கு வைத்திருந்ததாகவும், இப்போது பிளிப்கார்டுடன் தொடர்புடையவர்களுக்கு முதலீடு கைமாறியதாகவும் தெரிகிறது.
நஷ்டத்திலும் தொடரும் முதலீடு
தொடர்ந்து அதிக தள்ளுபடி கொடுப்பது எப்படி சாத்தியம்? ஒன்று விலையை ஏற்றி பிறகு தள்ளுபடி கொடுக்கலாம். பிரபலம் இல்லாத பொருட்களில் இது சாத்தியம். அல்லது மேலே குறிப்பிட்டவாறு நஷ்டப்பட்டாவது தள்ளுபடி கொடுக்கவேண்டும். இந்த ஆன்லைன் வர்த்தக நிறுவனங்கள் நஷ்டம் அடைகின்றனவா? அப்படியானால் அதில் முதலீடு செய்ய ஏன் துடிக்கின்றனர்?
2012-13 ல் ஸ்நாப்டீல் நிறுவனத்துக்கு ரூ.264.6 கோடி நஷ்டம் ஏற்பட்டதாகவும் பிளிப்கார்டுக்கு ரூ 281.7 கோடி நஷ்டம் ஏற்பட்டதாகத் தெரிகிறது. இருந்தாலும், ஆன்லைன் நிறுவனங்களுக்குள் போட்டியைக் குறைக்கவும் வியா பாரத்தை விரிவாக்கவும் ஒரு நிறுவனம் மற்றொரு நிறுவனத்தை வாங்குகின்றது. கடந்த மே மாதம் பிளிப்கார்ட் நிறுவனம் myntra என்ற fashion e-commerce நிறுவனத்தை ரூ.2,000 கோடி விலை கொடுத்து வாங்கியது.
அதே போன்று ரூ.7000 கோடிவரை மதிப்பிடப்பட்டுள்ள jabong என்ற fashion e-commerce நிறுவனத்தை அமேசான் நிறுவனம் வாங்க உள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது. பிளிப்கார்டின் மதிப்பு ரூ 60,000 கோடி இருக்கும் என்றும் ஸ்நாப்டீல் நிறுவனத்தின் மதிப்பு ரூ 18,000 கோடி இருக்கும் என்றும் இதில் முதலீடு செய்ய பலர் தயாராக இருப்பதாக செய்திகளை பத்திரிகைகள் வெளியிடுகின்றன. இப்போது நஷ்டம் ஏற்பட்டாலும் எதிர் காலத்தில் பெரிய லாபத்தை ஈட்டும் என்ற எதிர்பார்ப்பு இருப்பதால் அதிக முதலீடுகளை இந்த நிறுவனங்கள் ஈர்க்கின்றன, அதைக் கொண்டு தள்ளுபடி கொடுப்பதாக தெரிகிறது.
வரிச் சிக்கல்
நிறுவனங்களின் வியாபார அமைப்பு விற்பனை வரிச் சிக்கல்களை ஏற்படுத்து கின்றது. e-commerce நிறுவனங்கள் ஓரிரு மாநிலங்களில் தங்கள் இருப்புகளை வைத்துக்கொண்டு மற்ற மாநில வாடிக்கையாளர்களுக்கு பொருட்களை அனுப்புகின்றன. இதில் மாநில விற்பனை வரி (12.5%) செலுத்த வேண்டுமா அல்லது மத்திய விற்பனை வரி (2%) செலுத்த வேண்டுமா என்ற சிக்கல் உள்ளது.
மாநில விற்பனை வரிதான் செலுத்தவேண்டும் என்று மாநில அரசுகள் சொல்கின்றன. கர்நாடக அரசு அமேசான் நிறுவனம் அம்மாநிலத்தில் உள்ள சேமிப்புக் கிடங்கிலிருந்து வியாபாரம் செய்யக்கூடாது என்று கூறுகிறது. இந்நிறுவனங்கள் வரி ஏய்ப்பு செய்வதாக தமிழக அரசு குற்றம் சாட்டுகிறது. இந்த சிக்கலில் இருந்து வெளிவர GST என்ற புதிய வரி அமைப்பு செயல்படுத்தவேண்டும் என்று மத்திய அரசு நினைக்கிறது. ஆன்லைன் விற்பனை அதிகரிக்கும் போது இந்த வரிச் சிக்கல் மேலும் அதிகமாகும் என்று தெரிகிறது.
அடுத்தது என்ன?
இந்த சிக்கலை எல்லாம் மீறி ஆன்லைன் வர்த்தக நிறுவனங்கள் மென்மேலும் வளர்வதற்கான அறிகுறிகள் தெரிகின்றன. GST அடுத்த ஓரிரு ஆண்டுகளில் வந்துவிடும், அப்போது வரி சிக்கல் தீர்ந்துவிடும். தேவையைவிட அதிக முதலீடுகள் இந்நிறுவனங்களை நோக்கி வருகின்றன. எனவே வரும் காலத்தில் வியாபாரத்தை பெருக்க முடியும். தொலைதொடர்பு வசதிகளும், குறிப்பாக broadband இன்டர்நெட் வசதியும், மொபைல் இன்டர்நெட் வசதியும் வேகமாக பரவிவருவது இத்துறையின் வளர்ச்சிக்கு உதவும். இந்திய அரசின் தபால் நிலையங்களையும் e-commerce நிறுவனங்கள் பயன்படுத்தலாம் என்ற எண்ணம் வேரூன்றி வருகிறது.
இதற்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்தால் எல்லா கிராமங்களிலும் சிறு நகரங்களிலும் ஆன்லைன் வர்த்தகம் பரவும், தபால் துறைக்கும் கூடுதல் வருவாய் வரும் என்று கூறுகின்றனர். வியாபாரம் விரிவடையும் போது விற்பனை செலவு குறைந்து பொருட்களின் விலைகளும் குறையும் என்று எதிர்பார்க்கலாம். அதே நேரத்தில் ஒரு சில நிறுவனங்களே e-commerce துறையில் இருக்கும் போது வாடிக்கையாளரின் நன்மையை பாதுகாப்பது அவசியம். அதேபோல் இத்துறையில் அந்நிய நேரடி முதலீட்டை அனுமதிக்கவேண்டும் என்ற கோரிக்கை வலுத்துவருகிறது. அரசு என்ன செய்ய உள்ளது? காலம்தான் பதில் சொல்ல வேண்டும்.
இப்போது நஷ்டம் ஏற்பட்டாலும் எதிர்காலத்தில் பெரிய லாபத்தை ஈட்டும் என்ற எதிர்பார்ப்பு இருப்பதால் அதிக முதலீடுகளை இந்த நிறுவனங்கள் ஈர்க்கின்றன, அதைக்கொண்டு தள்ளுபடிகொடுப்பதாக தெரிகிறது.


நனறி :


பணம் கொட்டும் தொழில்கள்- உடனடி சப்பாத்தி!

உணவுப் பொருட்கள் தயாரிப்பு எப்போதுமே லாபகரமான தொழில். குறிப்பாக, உடனடி உணவுகளுக்கான சந்தை அதிகரித்து வருவதால், வாய்ப்புகளைப் பயன்படுத்தி உணவுத் துறை சார்ந்த தொழிலை தேர்ந்தெடுக்கலாம். அந்த வகையில் இந்த வாரம் நாம் பார்க்கப்போகிற தொழில், உடனடி சப்பாத்தி தயாரிப்பு.
நமது அன்றாட உணவுப் பழக்கத்தில் சப்பாத்தி இடம் பெற்றுவிட்டது. உடல்நலம் சார்ந்து மருத்துவர்களும் பரிந்துரைக்கிறார்கள் என்பதால், மார்க்கெட்டிங் செய்வதில் பெரிய சிரமங்கள் கிடையாது. நினைத்த நேரத்தில் தயார் செய்து சாப்பிட முடியும்; இதனால் நேரமும் வேலையும் மிச்சம் என்பதால், இதற்கு நல்ல வரவேற்பும் இருக்கும். 
தவிர, நீங்கள் வசிக்கும் ஏரியாவில் இருக்கும் ஹோட்டல்கள், ஹாஸ்டல்களை குறிவைத்து இறங்கினாலே போதும் நல்ல வருமானம் பார்க்கலாம். உணவு பொருட்களைப் பொறுத்தவரை, தரமாகவும், சுவையாகவும் கொடுத்தால் எந்த ஏரியாவிலும் ஜோராக விற்கலாம்! 

தயாரிப்பு முறை!
கோதுமை மாவை மொத்தமாக வாங்கிக்கொள்ளலாம். குறிப்பிட்ட அளவு மாவை, மாவு பிசையும் இயந்திரத்தில் கொட்டி அதனுடன் தேவையான அளவு தண்ணீர் மற்றும் எண்ணெய்விட்டு பிசைந்துகொள்ள வேண்டும். பிசையப்பட்ட இந்த மாவை சிறிய உருண்டைகளாக உருட்டும் இயந்திரத்தில் விட்டு உருட்டிக்கொள்ள வேண்டும். இந்த உருண்டைகளை சப்பாத்தி சுடும் இயந்திரத்தில் இட்டு சப்பாத்தியாகச் செய்துகொள்ள வேண்டும். தயாரித்த சப்பாத்திகளைக் குளிரவைத்து பாக்கெட்களாக அடைத்து விற்பனைக்கு அனுப்ப வேண்டியதுதான். பேக்கிங் கவரில் தயாரித்த தேதி மற்றும் பயன்படுத்தும் காலம் போன்றவற்றைக் குறிப்பிட வேண்டும்.
தேவையான இயந்திரங்கள்!
மாவு பிசையும் இயந்திரம், உருண்டை இயந்திரம், சப்பாத்தி செய்யும் இயந்திரம், குளிரூட்டும் கன்வேயர்கள், ஏர் கம்ப்ரஸர், தொடர் சீலிங் இயந்திரம். இந்த இயந்திரங்கள் மொத்தமும் ரூ.7 லட்சத்துக்குள் கிடைக்கும்.
திட்ட மதிப்பீடு! (ரூ.)
இடம் :     கட்டடம் வாடகை
இயந்திரங்கள் :            7 லட்சம்
மின்சாரம் :               1 லட்சம்
பாரதப் பிரதமர் வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டம் அல்லது நீட்ஸ் திட்டத்தின் மூலம் உற்பத்தி தொழில் மானியம் பெற முடியும்.

நமது மூலதனம் (5%):  ரூ. 40,000
மானியம் 25%     : ரூ.2,00,000
வங்கிக் கடன் 70%  :ரூ.5,60,000
நடைமுறை மூலதனம்: 2 லட்சம் (இதற்கு தனியாக வங்கிக் கடன் கிடைக்கும்)
உற்பத்தி!
ஓர் இயந்திரத்தின் மூலம் தினசரி 10 ஆயிரம் சப்பாத்திகள் வரை உற்பத்தி செய்ய முடியும். நாம் 8,000 சப்பாத்திகள் எனக் கணக்கு வைத்துக்கொள்வோம். இதை 800 பாக்கெட்களாக அடைத்துக் கொள்கிறோம். ஒரு கிலோ கோதுமை மாவு ரூ.22 முதல் ரூ.25 வரை கிடைக்கிறது. நாம் 25 என்கிற வகையில் வாங்குவதாக வைத்துக்கொள்வோம். இதனோடு தண்ணீர், உப்பு, எண்ணெய் சேர்க்கும்போது 1,700 கிராம் எடையும், கூடுதலாக ரூ.6 செலவாகும். ஒரு சப்பாத்தி சுமார் 45 கிராம் எடை என்கிற அளவில் தயாரிக்க வேண்டும்.  இதன்படி கணக்கிட்டால், நமக்கு 38 சப்பாத்திகள் கிடைக்கும். நாம் 35 சப்பாத்திகள் என்று கணக்கில் எடுத்துக்கொள்ளலாம். இதன்படி, ஒரு சப்பாத்தியின் உற்பத்தி செலவு 88 பைசா. 10 சப்பாத்திகள் வீதம் பேக்கிங் செய்ய ஒரு பாக்கெட்டுக்கு ரூ.2.50 செலவாகும். 
ஒருநாள் மூலப்பொருள்: ரூ.8,000X0.88 = 7,040
பேக்கிங் செலவு : 800X2.5 = 2,000

தினசரி உற்பத்தி செலவு ரூ.9,040 என்கிறபோது மாதம் 25 வேலைநாட்கள் எனக் கொண்டால், மாதத்துக்கு ரூ.2.26 லட்சம் உற்பத்தி செலவாகும்.
பணியாளர்கள்: (ரூ.)
மேற்பார்வையாளர் 1: 12,000
பணியாளர்கள் 3X8: 24,000   
விற்பனையாளர்கள்: 2 X 8000 : 16,000
மொத்தம்: 52,000
விற்பனை!
10 சப்பாத்திகள் கொண்ட ஒரு பாக்கெட் ரூ.25-க்கு விற்பனை செய்யலாம். (இதை அதிகபட்சமாக ரூ.40 வரை  கடைக்காரர்கள் விற்பனை செய்ய முடியும்) தினசரி 800 பாக்கெட்கள் மூலம் கிடைக்கும் விற்பனை வரவு ரூ.20,000. மாதம் 25 வேலைநாட்கள் என்கிறபோது
மாத வருமானம் ரூ.5 லட்சம்.

மொத்த செலவுகள்! (ரூ.)
வாடகை :     10,000
மூலப்பொருட்கள் :   2,26,000
மின்சாரம் :     10,000
வேலையாட்கள் :     52,000
மூலதனக் கடன் வட்டி (12.5%) : 5,900
கடன் தவணை 60 மாதங்கள்:     9,500
நடைமுறை மூலதன வட்டி(12.5%) : 2,100
இயந்திர பராமரிப்பு :     10,000
மேலாண்மை செலவுகள் :      10,000
தேய்மானம் :      8,800
போக்குவரத்து :     20,000
விற்பனை ஊக்க செலவுகள் :     50,000
மொத்தம் :    4,14,300
மொத்த வரவு :    5,00,000
மொத்த செலவு :    4,14,300
லாபம் :     85,700

நன்றி-
நாணயம் விகடன்
Related Posts Plugin for WordPress, Blogger...