share

Tuesday, August 11, 2015

வாழ்க்கையில் வெற்றி பெற 15 வழிமுறைகள் !


1- பிடித்த காரியத்தையே செய்ய வேண்டும் என்று நினைக்காதீர்கள். நீங்கள் செய்யும் காரியத்தை பிடித்ததாக மாற்றிக் கொள்ளுங்கள். விரைவில் நீங்களே ஒரு மாற்றத்தை உணர்வீர்கள்.
 
2- வாழ்க்கையில் எதற்கும் பயப்படாதீர்கள். வேலை பாதுகாப்பு என்பதை கருதி ஒரே இடத்தில் இருந்து விடாதீர்கள். புதிய முயற்சிகளால் மட்டுமே முன்னேற்றத்தை உணர முடியும்.
 
3- மற்றவர்களையும் உங்களுக்காக உழைக்க வைக்கும் புத்திசாலித்தனம் இருந்தால் மட்டுமே நல்ல ஒரு leader ஆகா முடியும் என்பதை உணர்ந்துகொள்ளுங்கள்.
 
4- கீழே விழுவது வேகமாக எழுவதற்காகவே, அதனால் விழுவதைப்பற்றி கவலை படாதீர்கள். அது வெற்றியின் ஏணிப்படி என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
 
5- வெற்றிக்கு நேரம் அவசியம் என்பதால், நேரத்தை உருப்படியாக செலவிட தெரிந்து கொள்ளுங்கள்.
 
6- எதற்கும் கவலை படுவதை விட்டு விட்டு எப்பொழுதும் பாசிடிவ் எண்ணங்களுடன் இருங்கள்.
 
7- வெற்றிக்கான முதல் சாவி உழைப்பு தான். அதனால் தினமும் குறைந்தது 10 முதல் 12 மணி நேரம் உழையுங்கள்.
 
8- முடியாது, கஷ்டம், நடக்காது போன்ற சொற்களை உங்கள் அகராதியில் இருந்து தூக்கி எறியுங்கள்.
 
9- வாய்ப்புக்களை தவற விடாதீர்கள். சரியான நேரத்தில் நன்றாக பயன்படுத்திக் கொள்ளுங்கள்.
 
10- நீங்கள் என்னதான் உழைத்தாலும் சில நேரங்களில் அதிர்ஷ்டம் தேவை. இறைவனை நம்புங்கள். உங்கள் வெற்றியினை இறைவனுக்கு காணிக்கை ஆக்குங்கள்.
 
11- வாழ்க்கையில் சந்தோஷம் என்பது பணத்தினால் மட்டுமே வருவது இல்லை. அதனால், உலகில் அனைத்து விஷயங்களையும் நேசிக்க கற்றுக் கொள்ளுங்கள்.
 
12- நாளை பார்க்கலாம் என்று எதனையும் தள்ளிப் போடாதீர்கள். அது நடக்காமலே கூட போய்விடக்கூடும்.

 
13- துணிச்சலான முடிவுகளை எடுக்கக் கூடிய தைரியம் வேண்டும்.
 
14- வெற்றி உடனடியாக கிடைத்து விடாது. ஒவ்வொரு படியாக, மெதுவாக ஆனால் உறுதியாக முன்னேறுங்கள்.
 
15- தொழிலில் பல சிக்கல்களும் இடயூருகலும் வரும் என்றாலும் கூட, நீங்கள் அஞ்சாமல் மன தைரியத்துடன் அவற்றை சந்திக்க வேண்டும்.



             { { { இணையங்களில் படித்ததை பகிர்கிறேம் } } }
 நண்பர்களே இப்பதிவு உங்களக்கு பிடித்திருந்தால் உங்களது கருத்துக்களை மறக்காமல் தெரிவிக்கவும்.

Wednesday, August 5, 2015

புதிதாக வேலைக்கு சேர்ந்தவர்களா ? அப்ப இத படிங்க.......

பெரும்பாலான கல்லூரி மாணவ, மாணவிகள் ஒரு நிறுவனத்தின் பணியாளராக தங்கள் வாழ்க்கையை தொடங்கி இருக்கும் சமயம் இது. பலருக்கு அந்த முதல் வேலையேகூட மொத்த வாழ்க்கையை
தீர்மானிக்கும் வாய்ப்பாக அமையலாம். எனவே, சிறப்பாக செயல்பட்டு, விரைவில் பணி உயர்வு கிடைத்து வாழ்கையில் செட்டில் ஆக வேண்டும் என்கிற எண்ணம் இளைஞர்களிடம் இருப்பது நியாயமானதுதான். 
இந்த முயற்சியில் பலர் வேலைப்பளு காரணமாக ஸ்ட்ரெஸ்ஸுக்கு ஆளாகி சில நேரங்களில் வேலையே வேண்டாம் என்கிற நிலைக்கு தள்ளப்படுவதைப் பரவலாக பார்க்க முடிகிறது. இந்த ஸ்ட்ரெஸ்ஸுக்கு பலியாகாமல் இருக்க என்ன செய்ய வேண்டும்? 
1. உணவும் உறக்கமும்!
 கல்லூரி நாட்களில் உணவுக்கும் உறக்கத்துக்கும் பஞ்சம் இருந்திருக்காது. ஆனால், வேலைக்கு வந்தபின் இரண்டும் கண்முன் இருக்கும். ஆனால், ப்ராஜெக்டை/வேலையை குறித்த நேரத்துக்குள் முடிக்க வேண்டும் என்கிற பயத்தில் இரண்டையும் தள்ளி வைத்துவிட்டு வேலையில் மூழ்கிப் போவோம். இது முற்றிலும் தவறு. உங்கள் உணவு மற்றும் உறக்கம் சரியாக இருந்தாலே ஸ்ட்ரெஸ் உங்களுக்கு ஒரு கிலோ மீட்டர் தூரத்தில் இருப்பது போலத்தான். ஒரு நாளைக்கு குறைந்தபட்சம் மனிதனுக்கு தேவையான  6 முதல் 7 மணி நேர உறக்கம் மிகவும் அவசியம். நிம்மதியாக தூங்கி எழுவது ஒரு நல்ல தியானத்துக்கு சமம் என்றுகூட நிரூபித்திருக்கிறார்கள் விஞ்ஞானிகள்.
அதேபோல் கல்லூரியில் படிக்கும்போது ஒரு சீரான உணவு முறையில்தான் நாம் சாப்பிட்டிருப்போம். வேலைக்கு வந்த உடன் அந்த சீரான உணவு முறையிலிருந்து மாறிவிட வாய்ப்புண்டு. பீட்ஸா, பர்கர் போன்ற உணவுகள் சாப்பிடுவது எல்லோரும் அறிந்ததுதான். ஆனால், வாங்கும் சம்பளத்தை மிச்சப்படுத்த வேண்டும் என்பதற்காக காலையில் பட்டினி கிடப்பது, திடீரென ஒரு நாள் நண்பனின் ட்ரீட் என்றவுடன் வயிறு முட்ட சாப்பிடுவது என்று சகட்டுமேனிக்கு நம் உடலின் போக்கை மாற்றிவிடுகிறார்கள். இப்படி செய்வதால் நம் உடல் எப்படி சீராக இயங்குவது என்று தெரியாமல் திணறி, பின் ஏதாவது பெரிய நோயில் சென்று முடிகிறது. சரியான நேரத்தில் சீரான உணவு நம் உடலை சீராக இயங்கவைப்பது மட்டுமின்றி மனதையும் அமைதியாக வைத்திருக்கும்.

2. இஷ்டப்பட்டு வேலை செய்யுங்கள்!
உங்கள் அலுவலக வேலையை நீங்கள் கஷ்டப்பட்டு செய்வதைவிட இஷ்டப்பட்டு செய்யுங்கள். ஸ்ட்ரஸ் என்பது உங்களை எட்டிக்கூட பார்க்காது. அப்படியும் அலுவலக வேலை கொஞ்சம் போராடித்தால் அல்லது லேசான பரபரப்பை உருவாக்கினால், சில நிமிடங்கள் மனதை வேறு விஷயங்களில் கவனம் செலுத்துங்கள். இதற்கு எளிய வழி, உங்களுக்கு பிடித்தவர்களுடன் சில நிமிஷம் பேசுவது அல்லது உங்களுக்குப் பிடித்த இசையைக் கேட்பது அல்லது காலார ஒரு பூங்காவில் சிறிது நேரம் நடப்பது. இப்படி செய்வதால் மனமும் உற்சாகம் அடையும். மீண்டும் சுறுசுறுப்பாக வேலையைப் பார்க்கத் தொடங்கலாம்.  
3. ஓய்வு நேரங்களில் ஸ்மார்ட் போன் வேண்டாமே!
நீங்கள் கல்லூரியில் படிக்கும்போது ஒரு நாளைக்கு 5 அல்லது 6 மணி நேரம் உழைத்திருப்பீர்கள். ஆனால், பணிக்கு சேர்த்தவுடன் உங்கள் வேலை நேரம் திடீரென இரண்டு மடங்கு அதிகரித்திருக்கிறது. இந்த மாதிரியான சமயங்களில் கல்லூரியில் இருந்ததை போல ஸ்மார்ட் போனில் வாட்ஸப், ஃபேஸ்புக் என்று நம் எனர்ஜியை செலவழிக்காமல், அந்த ஓய்வு நேரத்தில் உங்கள் எனர்ஜியை அதிகப்படுத்தும் செயல்களை செய்யுங்கள். இது உங்களை எப்போதும் புத்துணர்ச்சியுடன் வேலை செய்ய வைக்கும்.

4. புழம்புவதைவிட செயல்படுங்கள்!
உங்களுக்கு அதிக வேலை கொடுத்துவிட்டார்கள் என்று புழம்புவதைவிட, அந்த வேலையை எப்படி முடிப்பது என்று திட்டமிடுங்கள். உங்களுக்கு தரப்பட்ட வேலையை உங்களால் எளிதாக செய்து முடிக்க முடியவில்லை எனில் உங்கள் குழுவில் உள்ள சீனியர்களிடம் எப்படி அந்த வேலையை சரியாக, குறிப்பிட்ட நேரத்தில் முடிப்பது என்று கேட்டு அறிந்துகொள்ளுங்கள். இது சீனியர்களிடம் நல்ல உறவை தக்க வைத்துக் கொள்ளவும், குழுத் தலைவரிடம் நல்ல பெயரை வாங்கவும் உதவும்.
5. அலுவலக நேரத்தை திட்டமிடுங்கள்!
 பொதுவாக, நேரம் திட்டமிடல் என்ற உடன் காலை 5.30 மணிக்கு எழுவது, 6 மணிக்குள் குளித்துவிட்டு, 6.15 ரயில் பிடிக்க வேண்டும் என்று வழக்கம் போல் திட்டமிடுவதைவிட, வேலை நேரத்தில் என்ன செய்ய வேண்டும் என்று முழுமையாக திட்டமிடுங்கள். அலுவலகத்திற்குள் நுழைந்த உடன் கோப்புகளை பிரிப்பது, இன்று செய்ய வேண்டிய வேலைகளை பட்டியலிடுவது, நாளைக்கு தள்ளிப் போடக்கூடிய பணிகளை ஒதுக்குவது, நேற்று செய்த பணிகளை நம் மேலதிகாரிகளிடம் சமர்பிப்பது, நேற்றைக்கு முதல் நாள் செய்த பணிகளில் ஏதாவது தவறுகள் இருந்து குறிப்பிடப்பட்டிருந்தால் அவைகளை திருத்துவது என்று பணிகளை வரிசையாக பட்டியலிட்டுக் கொள்வது உங்களை ஸ்மார்ட்வொர்கராக மாற்றும்.
6. நண்பர்களுடன் நட்பு பாராட்டுங்கள்!
 நல்ல நண்பர்களுடன் பேசுவது ஸ்ட்ரெஸ்ஸிலிருந்து விடுபட ஒரு சிறந்த வழி. வேலைக்கு நம் சொந்த ஊரை விட்டு வேறு ஊருக்கு வந்தபின் நாம் தனிமையில் இருப்பதை உணர்வோம். இந்தத் தனிமை அலுவலகத்தில் உருவாகும் சின்னப் பிரச்னையைக்கூட பூதாகரமாக்கிக் காட்டும். இந்தத் தனிமையிலிருந்து சிறந்த வழி, நல்ல நண்பர்களுடன் நட்பு பாராட்டுவதே. புது இடம், புது சூழ்நிலை, புது கலாச்சாரம் என்று இருந்தாலும், அலுவலகத்தில் சிலரையாவது நல்ல நண்பர்களாக மாற்றிக் கொள்ளுங்கள். நமக்கு முன்பே அந்த அலுவலகத்தில் வேலை பார்ப்பதால், ஒரு வேலையை எப்படி செய்ய வேண்டும், எந்த மாதிரி செய்தால் வேலை விரைவில் முடிவடையும், எந்த முறையில் செய்தால் அதிகாரிகளிடம் நல்ல பெயர் கிடைக்கும் என்று அவர்கள் நமக்கு வழி காட்டுவார்கள்.
7. எமோஷனல் ஃபூல்களாக இருக்காதீர்கள்!
கல்லூரியில் பாடம் நடத்தும் ஆசிரியர் மீது கோபம் வந்தாலோ அல்லது அனைவர் முன்பும் நம்மை திட்டிவிட்டாலோ, வகுப்பை கட் செய்து வெளியே சுற்றலாம். ஆனால், அலுவலகம் பிடிக்கவில்லை என்று அடிக்கடி விடுமுறை எடுத்தால், நம் சம்பளம் கழிவதுடன், உயரதிகாரியிடம் நம் பெயரும் கெட்டுப் போகும். இது நம் வளர்ச்சிக்கே எதிராக அமையும். 
8. யோகாவும் தியானமும் நிம்மதி தருமா? 
நமக்கு கோபம் வந்தாலும், அந்த கோபத்தை சரியாக நிர்வகிக்கத் தெரிய வேண்டும். அப்படி செய்ய கொஞ்சம் யோகாவும், தியானமும் செய்து பார்ப்பது அவசியம். 
உங்கள் உடலும் உள்ளமும் சிறப்பாக இருந்தால், உங்கள் மனம் பரபரப்பு அடையாது. இதனால் உங்கள் வேலையை எப்போதும் உற்சாகமாக செய்யலாம்! 


       
           { { { இணையங்களில் படித்ததை பகிர்கிறேம் } } }
நண்பர்களே இப்பதிவு உங்களக்கு பிடித்திருந்தால் உங்களது கருத்துக்களை மறக்காமல் தெரிவிக்கவும்.

நன்றி !
http://www.vikatan.com/personalfinance/

Saturday, August 1, 2015

தொழிலில் பணப் பிரச்னையை சமாளிக்க பக்கா வழிகள் !

புதிய தொழில் ஆரம்பிக்க தேவைப்படும் நிதிக்கான வழிகள் குறித்து   பார்க்கலாம்...

காத்திருக்கும் வங்கிகள் !
புதிதாக சிறு மற்றும் குறுந்தொழில் செய்ய விரும்புகி றவர்கள் பணத்திற்கு எங்கே போவது என்று கவலைப்பட வேண்டியதில்லை. காரணம், இந்தியாவின் பல்வேறு பொதுத் துறை வங்கிகளும், தனியார் வங்கிகளும் தனிப்பட்ட நிதி நிறுவனங்களும் தொழிற்கடன் தருவதற்கு தயாராகவே இருக்கின்றன. நம்பிக்கையோடு புறப்படுங்கள். வெற்றி நிச்சயம்!

நீங்கள் யார்?
தொழிற்கடனைப் பெறுவதற்கு முன், நீங்கள் யார் என்பதை தீர்மானம் செய்து கொள்ளுங்கள். அதாவது, நீங்கள் தொடங்க இருக்கும் தொழிலுக்கு எவ்வளவு முதலீடு தேவைப்படும் என்பதை வைத்து மூன்று விதமாகப் பிரித்திருக்கிறது மத்திய ரிசர்வ் வங்கி.
25 லட்ச ரூபாய்க்கு மிகாமல் இருக்கும் தொழில்கள் குறுந் தொழில்கள் (மைக்ரோ) எனவும், 25 லட்சத்திலிருந்து 5 கோடி ரூபாய் வரைக்குமான தொழில்களை சிறு தொழில்கள் (ஸ்மால்) எனவும் 5 கோடி ரூபாய் முதல் 10 கோடி ரூபாய்க்குள் நடக்கும் தொழில்களை நடுத்தர தொழில்கள் (மீடியம்) என பிரிக்கப்பட்டிருக்கிறது. நீங்கள் புதிதாக தொடங்கப் போகும் தொழில் இந்த மூன்று வகையில் எதில் அடங்கும் என்பதைத் தெரிந்து கொண்டால், உங்களுக்கான கடனை எங்கு பெறுவது என்பதைக் கண்டுபிடிப்பதில் பிரச்னை இருக்காது.

வங்கியே சிறந்தது!
சிறு தொழில்களுக்கான கடனை தர வங்கிகள் உள்பட பல்வேறு நிதி நிறுவனங்கள் தயாராக இருக்கின்றன. ஆனால், இதில் வங்கிக் கடன்தான் சிறந்தது என்பது அனுபவசாலிகளின் முடிவு. இதற்கு முக்கிய காரணம், வட்டி. பொதுவாக, பொதுத் துறை வங்கிகள் அளிக்கும் தொழிற்கடனுக்கு 13 சதவிகிதத்திற்கு மேல் வட்டி வசூலிக்கின்றன. ஆனால், அரசு சாராத தொழில் வங்கிகள் ஓரளவுக்கு தாராளமாகவே கடன் தந்தாலும், அதற்காக வசூலிக்கும் வட்டி விகிதமும் அதிகமே. தனியார் வங்கிகள் 13 முதல் 15% வரை வட்டி விதிக்கின்றன.
இதுவாவது பரவாயில்லை, சில தனியார் நிதி நிறுவனங் களும் சிறு தொழில்களுக்கான கடனைத் தருகின்றன. இந்த கடனுக்கு அந்த நிறுவனங்கள் வசூலிக்கும் வட்டி விகிதத்தைக் கேட்டால் அதிர்ச்சி ஆகிவிடுவீர்கள். அதாவது, ஒரு லட்ச ரூபாய்க்கு ஒரு மாதத்திற்கு 5 ஆயிரம் ரூபாய் வட்டி (கிட்டத்தட்ட 60 சதவிகிதம்!) இதைக் கொள்ளை வட்டி என்றுதான் சொல்ல வேண்டும். தப்பித் தவறி இந்த கடனை அடைக்க முடியாத நிலை ஏற்பட்டால் குண்டுகட்டாக நம்மை தூக்கிக் கொண்டு போய் கிட்னியை எடுத்துவிட்டாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

குறித்த காலக் கடன்!
புதிதாக தொழில் தொடங்குபவர்களாக இருக்கட்டும், ஏற்கெனவே தொழில் தொடங்கி நடத்தி வருபவர்களாக இருக்கட்டும், வங்கிகள் அளிக்கும் குறித்த காலக் கடன் என்கிற இந்த டேர்ம் லோனை தாராளமாக வாங்கலாம். மூன்று ஆண்டுகளுக்குள் திரும்பச் செலுத்தும் கடனை குறுகிய காலக் கடன் என்றும், ஏழு ஆண்டுகளுக்குள் திரும்பச் செலுத்தும் கடனை நடுத்தர காலக் கடன் எனவும், ஏழு ஆண்டுகளுக்கு மேல் திரும்பச் செலுத்தும் கடனை நீண்ட கால கடன் என்றும் சொல்லப் படுகிறது.
இந்த டேர்ம் லோனை பெற உங்களிடம் சொத்து இருக்க வேண்டும். தவிர, இருவர் உங்களுக்கு ஜாமீனும் தரவேண்டும். தொழிலுக்கான முழுப் பணமும் உங்களுக்கு கடனாக கிடைத்துவிடும் என்று எதிர்பார்க்க முடியாது. உங்களிடமும் 10 முதல் 25% தொகை இருக்க வேண்டும். புதிதாக ஆரம்பிக்கும் தொழிலில் உங்கள் முதலீடு குறிப்பிட்ட அளவு இருந்தால் மட்டுமே தொழில் நடத்துவதில் உங்களுக்கு அக்கறை இருக்கும் என வங்கிகள் நினைப்பதால்தான் அவை இதை எதிர்பார்க்கின்றன.

நடைமுறை மூலதன கடன் !
வங்கி பாஷையில் சொல்ல வேண்டும் என்றால் 'வொர்க்கிங் கேபிட்டல்’. இந்த வொர்க்கிங் கேபிட்டல் இருந்தால்தான் தொழிலை தொடர்ந்து நடத்த முடியும். 'கேஷ் கிரெடிட் ஃபெஸிலிட்டி’ என்று சொல்லப்படும் இந்த நடைமுறை மூலதனக் கடனை வங்கிகளிலிருந்து இரண்டு விதமாகப் பெறலாம். ஒன்று, ஹைப்பாத்திகேஷன் என்று அழைக்கப்படுவது. இந்த முறையில் வங்கி மூலப் பொருளுக்கு கடன் கொடுக்கும். இந்த பொருளை பாதுகாப்பாகவும் சரியாகவும் பயன்படுத்தத் தெரிந்தவர்களுக்கு மட்டுமே இந்த முறையில் கடன் கிடைக்கும்.
வங்கி தரும் பொருளுக்கு பாதுகாப்பு இல்லாதபட்சத்தில் வங்கியே அதை ஒரு குடோனில் அடைத்து வைத்து, தேவைப்படுகிறபோது நாம் பணம் கொடுத்தால் வங்கி எடுத்துத் தரும். இதன் மூலம் ஒரே சமயத்தில் நாம் மொத்த மூலப் பொருளுக்கும் பணம் திரட்ட வேண்டியதில்லை.
'கேஷ் கிரெடிட் ஃபெஸிலிட்டி’ லோன் பெற சொத்தை காட்ட வேண்டும் என்கிற அவசியமில்லை.
25 லட்ச ரூபாய் வரையிலான வொர்க்கிங் கேபிட்டல் கடனை பெற எந்த வகையான சொத்தையும் வங்கிகள் அடமானமாக கேட்கக்கூடாது என்பது விதி. ஆனால், இந்த விதியை பல வங்கிகள் பின்பற்றுவதில்லை. காரணம், சொத்து ஏதும் பெறாமல் கொடுத்த கடன் திரும்ப வராததே இதற்கு காரணம்.

வென்ச்சர் கேபிட்டல் !
உங்களிடம் பிரமாதமான பிஸினஸ் ஐடியா இருக்கிறதா? அந்த பிஸினஸை எப்படி நடத்தி வெற்றி காண முடியும் என்கிற வழியும் தெரிந்திருக்கிறதா? யெஸ் எனில் உங்கள் தொழிலுக்கு தேவையான முதலீட்டை செய்யத் தயாராக இருக்கின்றன வென்ச்சர் கேபிட்டல் நிறுவனங்கள்.
பொதுவாக, எந்த வகையான தொழில்களிலும் இந்த வென்ச்சர் கேபிட்டல் ஃபண்டுகள் முதலீடு செய்துவிட மாட்டார்கள். ஓரளவுக்கு நவீன தொழில்நுட்பம் கொண்ட தொழிலாக இருக்கும் பட்சத்தில் நிச்சயம் முதலீடு செய்வார்கள். உதாரணமாக, ஊறுகாய் தயாரிக்கப் போகிறேன் என்றால் வென்ச்சர் கேபிட்டல் ஃபண்டுகள் முதலீடு எதுவும் தராது.
ஆனால், பயோ டெக்னாலஜி தொழில் நுட்பத்தின் அடிப்படையில் ஊறுகாய் தயாரித்து, அதை வெளிநாடு களுக்கு ஏற்றுமதி செய்யப் போகிறேன் என்று சொன்னால் வென்ச்சர் கேபிட்டல் ஃபண்டுகள் உங்கள் தொழிலில் முதலீடு செய்தாலும் செய்யலாம்.
வென்ச்சர் கேபிட்டல் ஃபண்டு களில் பாசிட்டிவ்-ஆன விஷயம், முதலீட்டுக்கு ஒரு வரம்பே இருக்காது. ஒரு கோடி ரூபாய் முதல் 5 கோடி ரூபாய் வரை எடுத்த எடுப்பிலேயே போடுவார்கள். இந்த முதலீட்டுக்கு வட்டி எதுவும் தரத் தேவையில்லை என்பது இன்னும் விசேஷம். ஆனால், தொழில் மூலம் கிடைக்கும் லாபத்தை முதலீட்டு விகிதாசாரப்படி பிரித்துக் கொடுத்துவிட வேண்டும் என்பது கண்டிஷன்.
ஐ.சி.ஐ.சி.ஐ. வென்ச்சர் ஃபண்ட்ஸ் மேனேஜ்மென்ட் கம்பெனி லிமிடெட், ஐ.எஃப்.சி.ஐ. வென்ச்சர் கேபிட்டல் ஃபண்ட்ஸ், எஸ்.ஐ.டி.பி.ஐ. வென்ச்சர் கேபிட்டல் லிமிடெட் என பல நிறுவனங்கள் இருக்கின்றன. எனினும், நீங்கள் ஆரம்பிக்கும் தொழில் பெரிய அளவில் புதுமைகள் எதுவும் இல்லாத வழக்கமான தொழில் எனில் வென்ச்சர் கேபிட்டல் ஃபண்டுகளின் ஆதரவை எதிர்பார்க்க வேண்டாம்.
மற்றவர்கள் கொடுக்கும் கடனை வைத்துத்தான் தொழில் நடத்த முடியும் என்று நினைக்கிறவர்களுக்குத்தான் இதெல்லாம். கையில் பணமிருக்கு. இப்போதைக்கு கடனே தேவை இல்லை! என்று நினைப்பவர்கள் எதற்கும் காத்திருக்க வேண்டியதில்லை! நீங்கள் நேரடியாக தொழிலை ஆரம்பித்துவிடலாம்! பெஸ்ட் ஆஃப் லக்! 


இதெல்லாம் இருக்கிறதா ?
  தொழிற்கடன் கேட்டு வங்கிகளை அணுகும்போது இதெல்லாம் உங்களிடம் இருக்கிறதா என்று பார்க்கச் சொல்கிறார் கேபிட்டல் மார்க்கெட் சர்வீஸ் நிறுவனத்தின் தலைவர் சிவக்குமார்.
* புராஜெக்ட் ரிப்போர்ட் கட்டாயம் தேவை !
நீங்கள் என்ன தொழில் செய்யப் போகிறீர்கள்? மூலப் பொருளை எங்கு வாங்குவீர்கள்? உற்பத்தியான பொருளை எங்கே விற்பீர்கள்? என்கிற மாதிரியான கம்ப்ளீட் ரிப்போர்ட்தான் இந்த புராஜெக்ட் ரிப்போர்ட். இந்த ரிப்போர்ட் இல்லாதவர்களிடம் வங்கி அதிகாரிகள் ஒன்றிரண்டு வார்த்தைக்கு மேல் பேச மாட்டார்கள்.
* 20 - 25% முதலீடு தேவை !
நீங்கள் செய்யப் போகும் தொழிலுக்கான முழு முதலீட்டையும் வங்கியிடமிருந்து எதிர்பார்க்கக்கூடாது. உங்கள் பங்களிப்பாக 20 - 25% முதலீடு கட்டாயம் இருக்க வேண்டும். இது பணமாகவும் இருக்கலாம்; உங்கள் தொழிலுக்குத் தேவையான ஒரு இயந்திரத்தை வாங்கியதாகவும் இருக்கலாம் அல்லது அட்வான்ஸ் தந்திருக்கலாம்; மூலப் பொருளாக வாங்கி வைத்திருக்கலாம்.
* சொத்து, ஜாமீன் தேவை !
வங்கி உங்களுக்கு அளிக்கும் கடனுக்கு ஈடான ஒரு சொத்தையும் ஜாமீனையும் அளிக்க வேண்டியது உங்கள் கடமை. பெரிய அளவில் சொத்தோ, ஜாமீனோ கொடுக்க இயலாதவர்கள் வங்கியிடம் கடன் கேட்காமல் இருப்பதே நல்லது.
* அத்தனையும் அறிந்தவராக இருங்கள் !
நீங்கள் தொடங்கப் போகும் தொழில் பற்றி அனைத்து விஷயங்களையும் அறிந்தவராக இருங்கள். வங்கி உங்களுக்கு கடனுதவி மட்டுமே செய்யும். உங்களுக்கு வரும் பிரச்னைகளை சமாளிக்க வங்கி எந்த விதத்திலும் உதவாது என்பதை மறக்காதீர்கள்.


Related Posts Plugin for WordPress, Blogger...